
ஒரு கையடக்க அலைபேசிக்குள் ஒரு பிடிஎஃப். முடுக்கிவிட்ட வானொலிபோல் தொடர்ந்து படித்துக்கொண்டே போகிற இன்ஸ்டா ரீடர்களுக்கு மாற்றாய் ஒரு பாய்ச்சல்.
இனி பிடிஎஃப்கள் என்றில்லை, ஈபப், டெக்ஸ்ட் என எதையும் வரிவரியாய் பத்தி பத்தியாய் படிக்கலாம், படித்ததைக் குறிப்பெடுக்கலாம், வினாவாக மாற்றலாம் என என்னென்னவோ வசதிகள். இந்த முயற்சியைச் சாத்தியமாக்கியவர் திரு. ரஞ்சித் என்கிற இளைஞர்.
ஏற்கனவே தனது யூட்டூப் வலைதளம் வழியாக தொழில்நுட்பம் சார்ந்த நிறைய காணொளிகளைப் பல மெனக்கெடல்கள் மற்றும் தேடல்களை இணைத்து வெளியிட்டு வருகிறார். அத்தோடு Accessible Met என்ற பொருண்மையின்கீழ் பார்வைத்திறன் குறையுடையவர்களுக்கான பிரத்யேக சுற்றுலாக்களை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
இப்போது பார்வைத்திறன் குறையுடையோருக்கான வாசிப்புத் தளத்தில் ஒரு புதிய பாய்ச்சலாய் Read Flow.அவரோடான உரையாடலைக் கேளுங்கள். சில நுட்பமான அவதானிப்புகளை நீங்கள் அடையலாம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
