வெற்றித்தடாகம் என்ற பெயரில் www.maatruthiran.com என்கிற இணைய முகவரியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளமாகக் கடந்த டிசம்பர் 18 2018 அன்று தொடங்கப்பட்ட இந்தத் தளம் தற்போது சவால்முரசாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகள், கட்டுரைகள், நடுவண் மற்றும் மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், அரசாணைகள், மாற்றுத்திறனாளிகளுக்காய் இயங்கும் அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அவ்வப்போது வலையேற்றம் செய்யப்படுகின்றன.
- தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (4) சங்கீத சக்கரவர்த்தி: S. அஷோக் பாலா
குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது. - சொல்ல மறுக்கும் கதை: (1) புதிய தொடர்அறிவும் திறனும் ஒன்றுகூட்டி ஊட்டப்பட்ட கல்வியில் பெரும் பின்னடைவு நேர்ந்திருக்கிறது
- தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (3) பார்வையைப் பறித்த முனி: S. அஷோக் பாலா
எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு - தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (2) அந்தக் கடைசிப் பேருந்து S. அஷோக் பாலா
கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை. - விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா
எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.
