மின்னிதழ் பற்றி

உடல்க்குறைபாடுகளில் அதிக முக்கியத்துவம் தந்து பொருட்படுத்த வேண்டிய ஒன்று பார்வையின்மையும் அதன் சவால்களும். இன்றைய சூழலில், மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலால், பார்வையின்மை அல்லது பார்வைக்குறைபாடு குறித்த சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுச் சிந்தனையைப் பார்வைத்திறன் குறைபாட்டிலிருந்து தொடங்கிய முந்தைய காலகட்டம் ஒன்று இருந்தது. பார்வையின்மையிலிருந்து தொடங்கினாலும், அனைத்துத் தரப்பு ஊனமுற்றவர்களுக்கும் அது பயன்விளைவிப்பதாய் அமைந்தது. காரணம், பார்வையின்மையின் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் முழுக்க அகம் சார்ந்தவை, ஆழ்ந்த சிந்தனைகளைக் கோரக்கூடியவை

இன்றைய துரித காலகட்டத்தில், அகம், ஆழம் என்ற சொற்கள் பொருளிழந்துவிட்டன. இங்கு எல்லாமே ஹாபி, எதுவுமே லாபி என்ற வாசகம் படிப்படியாக ஒரு கோட்பாடாகவே மாறிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய அக இருண்மை சூழ் காலகட்டத்தில், நமக்கான அகல்களை நாம்தான் ஏந்திட வேண்டும். அப்படிப் பார்வைத்திறன் குறையுடையோருக்காக ஏற்றப்பட்ட முதல் ஞானவிளக்கு ‘விழிச்சவால்’. இப்போதும் சுடர்ந்துகொண்டிருக்கும் இரண்டாவது விளக்கு விரல்மொழியர். மூன்றாவதாகவும் ஒரு விளக்கை ஏற்றலாமே என்கிற உந்துதல் திரி, உழைப்பென்னும் நெய்யில் ஓயாது எரிய, ஒளிரத் தொடங்கியிருக்கிறது  தொடுகை மின்னிதழ்.

இது பார்வைச்சவால் குறித்துப் பேசும். பார்வைச்சவாலுடையோரின் குரல்களைப் பிரதிபளிக்கும். பார்வையற்றோர் அல்லது பார்வைத்திறன் குறையுடையோர் தொடர்பான நிகழ்ந்தன, நிகழ்வன குறித்து முடிந்தவரை ஆவணப்படுத்த முயலும்.

பார்வையற்றோர் தமக்குள் உறவாடி, பொதுச்சமூகத்தோடு உரையாடும் களமான தொடுகையின் மாறா விதி ஒன்று உண்டு. அது, பார்வையற்றவர்கள் அல்லது பார்வைத்திறன் குறையுடையவர்கள் எந்த ஒரு பொருண்மை குறித்தும் எழுதலாம், பிறரோ, பார்வையின்மை, பார்வையற்றோர் குறித்து மட்டுமே எழுத வேண்டும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே!

தொடுகையால் தோழமை கொள்வோம்,

தோழமையால் துயர்களை வெல்வோம்.

இதழிலிருந்து

  • தளிர்களின் பயணம்: அமைதியான குளத்தில் எழும் சலசலக்கும் சிற்றலைகள்
    ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.
  • கல்வி: பெருமை மகிழ்ச்சிதான், பெருமிதம் வேண்டும்!
    ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
  • ஆளுமை: அதிகம் அறியப்படாத ஆன்சலிவன்
    அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!
  • களம்: வாழ்த்துகள் தவெகா!
    தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
  • நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா
    யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என்… Read more: நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா