தொடுகை மின்னிதழைத் தொடர்ந்து செலுத்திட, உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கமும், உளம் திறந்த ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆக்கங்களால் இதழைச் செறிவுடையதாக, பன்முகத்தன்மை கொண்டதாக மிளிரச் செய்ய முன்வர வேண்டும்.
இதழில், பார்வையற்ற தோழர்கள், வரலாறு, கலை, இலக்கியம், சமகாலம், சமையல் என என எதுகுறித்தும் எழுதலாம்.
பார்வையுள்ள தோழர்கள், பார்வையற்றவர்கள் பற்றி மட்டுமே எழுதிட வேண்டும்.
எழுத்து தவிர, இணையதள வடிவமைப்பு, கட்டுரைகளை மெய்ப்பு பார்த்தல், வெளியாகும் கட்டுரைகளை ஒலிக்கோப்புகளாக மாற்றுதல், ஒலிக்கோப்புகளைக் கேட்டு படைப்புகளைத் தட்டச்சு செய்து தருதல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வழிகளில் எங்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றலாம்.
ஆகவே, வாருங்கள் நண்பர்களே!
தொடுகையால் தோழமை கொள்வோம்,
தோழமையால் துயர்களை வெல்வோம்.
இதழிலிருந்து
- கண்ணோட்டம் – சிறுகதை
- நிகழ்வு: புத்துயிர்ப்பும் புது வெளிச்சமும்
- சட்டமன்றத் தேர்தல் 2026: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- ஆளுமை: கண்ணீரைத் துடைக்கும் விரல்கள்: மகளிர்தின சிறப்புக்கட்டுரை – S. அசோக் பாலா
- வெற்றிக்களம்: யூபிஎஸ்சி 2025 தேர்வு முடிவுகள்: 42 மாற்றுத்திறனாளிகள் தேர்வு
