தமிழக அரசுக்கு நன்றி
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
தமிழக அரசுக்கு நன்றி
பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார். “தம்பி தமிழ்வாணா! அருப்புக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?” “ஏன் சார் என்ன விஷயம்?” “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”. “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?” “அட எனக்கில்லப்பா. ரோசி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? மரியா ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ அருப்புக்கோட்டைல […]
விகடனின் நம்பிக்கை விருது பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது பார்வையற்றவர்.
உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்த்து புதிய முயற்சியாய் தொடுகை.
எவரும் எவரோடும் விரைவாகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இந்த நூற்றாண்டின் இணைய வசதி சாத்தியமாக்கியிருக்கிறது. ஏற்போ, எதிர்ப்போ தனிமனிதன் தன்னுடைய தரப்பை முன்வைத்து உரையாடும் களமாக மாறிவிட்டது இணையம். ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியமான சமத்துவச் சிந்தனைகள் மேலும் கூர்கொள்ளத் தொடங்கியிருப்பது இணையத்தால்தான். வாக்கு வங்கியாகக்கூட மாற இயலாத, ஆண்டாண்டுகளாய் ஆள்வோரின் பார்வையே பட்டிராத சமூகத்தின் விளிம்புநிலை அலகுகளிலிருந்தும்கூட நீதிக்கான இறைஞ்சல்கள் மேலெழுவதும், அவைப் பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டி, தட்டிக்கழிக்கவே இயலாத நிர்பந்தத்துக்குள் அதிகாரத்தைத் தள்ளுவதுமான நிகழ்வுகள் […]
பார்வையற்றோரைப் பொருத்தவரை, நமக்கு அகரம் முதல் அகிலம் வரை அனைத்தையும் அறிமுகம் செய்கின்ற சிறப்புப்பள்ளிகள் தாய்வீடுகள் போன்றவை.
பள்ளி வயது பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம்.
உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.
“சரிதான்… கல்வியிலும் இட ஒதுக்கீடு, பணி வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, இப்போது பதவி உயர்வீலும் இட ஒதுக்கீடா?” என்ற அயர்ச்சியும் மிரட்சியும் சிலருக்குத் தோன்றக் கூடும்.