Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் தமிழக அரசு

திட்டம்: அறிவித்தால் போதாது! ஆணை வெளியிடுங்கள்!

வெற்றிப் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அரசாணையில் பெண்கள், சிறுமியர் மற்றும் திருநர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் பேருந்தில் பயணச் சீட்டு வழங்குவதான புகைப்படம்
புகைப்படக் காப்புரிமை தினகரன்

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்படவில்லை என்பது அரசு வெளியிட்டிருக்கிற

அரசாணையின்

மூலம் தெரியவருகிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, மாற்றுத்திறனாளிகள் நலன் கொள்கை விளக்கக் குறிப்பினை வாசித்த மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள், மகளிர் வெற்றிப் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்திவிட்டதுபோல், அடுத்த நாளே

ஒரு அரசாணையும்

வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அந்த அரசாணையின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு, அது ஒரு போலி அரசாணை என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

வெற்றிப் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அரசாணையில் பெண்கள், சிறுமியர் மற்றும் திருநர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அதில் இடம்பெறவில்லை. ஆனால், மாண்புமிகு போக்க்உவரத்துத் துறை அமைச்சர் திரு. தமிழன் பார்த்திபன் அவர்களிடம் கேட்டால், மாற்றுத்திறனாளிகளும் வெற்றிப் பயணம் செய்யலாம் எனச் சொல்லி நகர்கிறார்.

இது குறித்த விரிவான விளக்கக் குறிப்பையோ, செயல்முறை ஆணைகளையோ மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிடாதவரை, இந்தக் குழப்பங்கள் நீடித்தபடிதான் இருக்கும்.

தற்போதைய நிலையில், ஒரு பெண், மாவட்டத்துக்குள் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள், டீலக்ஸ், LSS பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். மகளிர், சிறுமியர், திருநரைப் பொருத்தவரை, இந்தப் பயணம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அவர்களுக்குச் சாத்தியம். விளக்கமாகச் சொன்னால், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்ல விரும்பும் ஒரு பெண் பயணி,இடையில் இருக்கும் சில மாவட்டங்கள் கடக்கப் பல சாதாரணக் கட்டணப் பேருந்துகள் மாறி மாறி பயணம் செய்ய வேண்டியிரு்க்கு்ம். ஆனால், ஒரு மாற்றுத்திறனாளி அவர் சார்ந்த மாவட்டத்துக்குள் மட்டுமே முழுக் கட்டண விலக்குடன் பயணிக்க முடியும்.

சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் என ஏழு கோட்டங்களிலும் இயக்கப்படுகிற 18413 பேருந்துகளில், 12695 பேருந்துகள் இந்தத் திட்ட வரம்புக்குள் வருகின்றன எனவும், திட்டத்தின் மூலம், தினசரி 84.32 லட்சம் மகளிர், சுமார் 168500 பயணங்களை மேற்கொள்வார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நிறைவேற்றுவதால், அரசுக்கு ஆண்டுஒன்றுக்கு ரூ. 6000 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மகளிர் என்ற காரணத்தால் திட்டத்தில் இயல்பாகவே இணைந்துவிட்டார்கள் மாற்றுத்திறனாளிப் பெண்கள். ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நல்லதொரு செய்தி வரும் என எதிர்பார்ப்போம். அந்தச் செய்தி, பத்திரிக்கையாளர்ச் சந்திப்பில் போகிற போக்கில் சொல்லும் வெறும் வாய்ச் சொற்களாக மட்டுமே இருக்கும்வரை நமது பயணங்கள் சுயமரியாதையுடன் அமையாது. எதார்த்தமாகச் சொன்னால், அதிகாரப் பூர்வமாய், அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, நாம் இப்போது மேற்கொள்ளும் பயணங்களிலேயே 85 விழுக்காட்டுப் பயணங்கள் மன உலைச்சல் கொண்டவைகளாகவே இருக்கின்றன. எனவே, வெற்றிப் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு ஆவணம் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு நம்முடைய அமைப்புகளுக்கானவை.

அதனைவிடக் கூடுதல் பொறுப்பு என்ன தெரியுமா? அப்படி வெளியிடப்படும் அறிவிப்பு ஆவணத்தின் உண்மைத் தன்மையைச் சோதித்து அறிவது?

எப்படிச் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?

***சகா

முக்கிய இணைப்பு:

https://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-the-vettri-payanam-thittam-launched-by-tamil-nadu-cm-


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.