Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

கட்டணமில்லாப் பேருந்துப் பயண அரசாணையும் சில ஐயங்களும்

தமிழ்நாடு அரசு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

அரசாணை நிலை (  GO.MS ) எண்: [105] நாள்: 31 ஆகஸ்ட் 2026

பொருள்: மாற்றுத்திறனாளிகள் அனைத்து வகையான நகரப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி – விரிவாக்கம் – ஆணை வெளியிடப்படுகிறது.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மக்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்கு அனைத்து வகையான பொது போக்குவரத்து சேவைகளும் எளிதாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், 31 ஆகஸ்ட் 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 40% மற்றும் அதற்கு மேற்ப, மாற்றுத்திறன் கொண்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் அனைத்து வகையான நகர மற்றும் மாநகரப் பேருந்துகளிலும் (AC பேருந்துகள் நீங்கலாக) கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இச்சலுகையைப் பெற உரிய அடையாள அட்டை அல்லது UDID அட்டை காண்பிக்கப்பட வேண்டும்.

ஆளுநரின் ஆணைப்படி

துறைச் செயலாளர்

அரசாணையைப் படிக்க மற்றும் பதிவிறக்க:

1. வெளியாகியிருக்கிற அரசாணை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. இது மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் விரிவாக்கம் என்பதால் அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதா?

2. தமிழக சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையினை வாசித்த மாண்புமிகு சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள், “குளிரூட்டப்பட்ட பேருந்து நீங்கலாக அனைத்து நகர மற்றும் மாநகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்கள் உடன் செல்வோருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச் சலுகை விரிவுபடுத்தப்படும்” என அறிவித்தார். அரசாணையில் அது குறித்த விவரங்கள் இல்லை.

3. இனி விலையில்லாப் பயணத்துக்கு மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை (UDID) அல்லது உரிய அடையாள அட்டையினைக் காட்ட வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்டுள்ள விலையில்லாப் பயண அட்டையை வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் அதற்கான அவசியம் இல்லையா?


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “கட்டணமில்லாப் பேருந்துப் பயண அரசாணையும் சில ஐயங்களும்”

அணைத்து வகை நகர பேருந்து மற்றும் இலவசம் என அரசனை உள்ளது அணைந்து புறநகர பேருந்து இலவச வெற்று அறிக்கையாக இல்லாமலும் அணைந்து வகை புறநகர பேருந்திலும் இலவசம் அரசனை வெளியிட வேண்டும்

Like

இனி எதிர்வரும் காலங்கள் அணைந்து பேருந்துகளும் AC பேருந்துகள் கொள்முதல் செய்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதாக இருந்தால் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.