சவால்முரசு வழங்கும் புதிய பகுதியில் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள்குகாக அறிவிக்கும் வாய்ப்பு அறிவிப்புகள் இடம்பெறும்.
தங்களது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எமது தளத்தில் இடம்பெறச் செய்ய mail@savaalmurasu.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.
• வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும்
கரோனா ஊரடங்கு காரணமாக, பெருநிறுவனங்களின் குளிர் அறைக் கூடுகைகளையும் கடந்து, சாமானியனின் ஒற்றை அறைக்குள்ளும் ஒளிர்மிகு அரங்கைக் கட்டமைத்த பெருமை ஜூம் தொழில்நுட்பத்தையே சாரும். வாடகைக்கு மண்டபம் பிடித்து, வருவோருக்கு மத்திய உணவு வழங்கி, கவனிக்க அவசியமான உரைகளின் இடையேயும் காஃபி டீ பரிமாறி, எல்லாவற்றிற்கும் எவரெஸ்டாய் பங்கேற்றோருக்கான பயணப்படியெல்லாம் பட்டுவாடா செய்வதற்குள், ஸ்ஸப்ப்ப்பா. இனி அதற்கெல்லாம் வேலை இல்லை. நூறுபேர் உட்காரும், இல்லை படுத்திருக்கும் இல்லை இல்லை அவரவர் வேலையைச் செய்துகொண்டே இங்கேயும் தன் அவதானிப்பைக் […]
2020 புத்தகத்தைத்திருப்பினேன்.
மகிழ்ச்சியைத் தந்த வெற்றிகள், சில மரணங்களின் கொடையாய் வேதனைகள், நம்பிக்கை ஊட்டிய சாதனைகள், நடுநடுவே பல சருக்கல்கள்.
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்
சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்
மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
வருஷம் முழுக்க அரசுக்கும் நமக்கும் வாய்க்கால் வரப்புத் தகராறுதான்ணே. ஸ்டேட்டாவது கொஞ்சம் கேட்டுக்குள்ள நின்னாங்க. என்ன வேணும்? ஏது தேவைனு கேட்கவாவது செஞ்சாங்க. இந்த செண்ட்ரலு நம்ம கண்ட்ரோல்லையே இல்ல. ஜெயரஞ்சன், சித்தரஞ்சன், இது என்னடா திவ்யாஞ்சன் புதுப்பேருன்னு பார்த்தா, தெய்வாம்சம் கொண்டவுங்கனு அர்த்தமாம். சரியான மனோரஞ்சன்தான் போங்க. அட மனோரஞ்சன்னா ஹிந்தில டைம் பாஸ்னு அர்த்தம்ணே. “ஏம் மா இந்த காக்லியர் ஆப்ரேஷனுக்கு 5%, அதுக்கு யூஸ் பண்ணுற மெஷினுக்கெல்லாம் 12 18% ஜிஎஸ்டி போட்டா […]
இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
