ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்
சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்
மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள் 1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இவ்வழக்கு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல்,15 […]
காதலிக்குச் சொல்வதாக அவன் ஏதேதோ உளற, அந்தப் பெண்ணோ அதையெல்லாம் பொறுமையாக எழுதுகிறாள். இடையிடையே அந்தப் பெண் கேட்கும் கேள்விகளுக்கு அவன் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான பதில்களையும் அவள் பொறுமையோடே கையாளுகிறாலாம். இதற்கெல்லாம் உச்சமாய் அந்தக் கடிதத்தை அவன் அவளுக்கே தரும்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லையாம். நம்புங்கள் இது ஏற்கனவே திட்டமிடப்படாத ப்ராங்காம்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்ற கவிஞர் செல்வி. நாகேஸ்வரி அவர்களின் கவிதை. சிலிர்க்கவைக்கும் குளிரழகு, – வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு! மலர்களின் மணமழகு, மெய் தீண்டும் காற்றழகு! வளர்ந்து நிற்கும் மரமழகு, – அந்த மரங்கள் தரும் நிழலழகு! பறவைகளின் ஒலியழகு, பாய்ந்துவரும் அலையழகு! படிப்பென்றால் வரிகள் அழகு, நடிப்பென்றால் வசனம் அழகு! பேச்சென்றால் குரலழகு, – பாடும் பாட்டென்றால் ராகம் அழகு! அநீதியற்ற நாடழகு, […]
”எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்.”பேராவூரணி அருகே, பெற்றோர் இல்லாத நிலையில் வாழ வழியில்லாமல், பார்வைக் குறைபாடுடைய சிறுமி தனது அண்ணனுடன் தவித்து வருவது குறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது அந்தச் சிறுமிக்கு சிகிச்சையும் பார்வையும் கிடைத்திருப்பதுடன், பல்வேறு உதவிகளும் கிடைத்து வருவதாக சிறுமியின் தரப்பில் நெகிழ்ச்சியுடன் […]
ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மாநிலத்தில் முழுமையாகவும், வலிமையாகவும் அமல்ப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஊனமுற்றோருக்கான பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும்