மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் அவ்வப்போதைய தொகுப்பு
செய்திக்கொத்து 04/04/2022
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் அவ்வப்போதைய தொகுப்பு
பார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள்.
ப. சரவணமணிகண்டன்
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் நேற்று நடத்திய போராட்டம் குறித்துப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
நாமக்கல் பிரபாகரனைத் தொடர்ந்து இப்போது விராலிமலை சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்துக் காவல்த்துறையினருக்கு சிறப்புப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
1. பபாசி புத்தகக் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் நூல்களை வைக்க தனி அரங்கு அல்லது தனிக்கவனம் பெறும் வண்ணம் ஒரு விண்டோவை எற்பாடு செய்ய வேண்டும்.
2. தமிழக அரசின் நூலக ஆணைக்குழு மாற்றுத் திறனாளிகளின் நூலுக்கு சிறப்புரிமை அடிப்படையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி தமிழக நூலகங்களில் வைக்க வேண்டும்.
3. தமிழக அரசு வருடந்தோறும் சிறப்புரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளருக்கு சிறப்பு விருது ஒன்றை அறிவிக்க வேண்டும்.
4. தமிழ்நாடு பல்கலைக்கழகப் பாடத்திட்ட குழுக்கள், சாதரண மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் நூல்களை பாடத்திட்டங்களில் வைக்க வேண்டும்.
5. ஒவ்வொரு பதிப்பாளரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டும்.
எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வையுங்கள் என்பதாகட்டும், இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என அவர்கள் சொல்லும்போது பக்கம் சொல்லாமல் வலது இடது என சொல்ல அவர்களைப் பழக்க வேண்டும்.
எத்தனைபேர் உங்களுக்காக வாதாடத் தயாராக இருந்தாலும், நீங்கள் உங்களுக்காகப் பேச முனைப்புகொண்டிருக்கிறீர்களா (self-advocacy) என்பது முக்கியம்
ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு அநீதி நடக்கிறதென்றால் அவளையே கேள்வி கேட்கும் ஆதரவுச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெண்களே அப்படித்தான் கேட்கிறார்கள்
ஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.