பார்வையற்றோரின் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வரும் அறிவே துணை ஆய்வு மையத்தின் பொதுக்குழு கூட்டம், கடந்த 30-09-2024 அன்று கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை முன்னர் இருந்ததுபோல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருமாறு பார்வையற்றோருக்கான அறிவே துணை […]
