மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட நல அலுவலகங்களில் காலியாக உள்ள 17 உதவி வரவேற்பாளர் பணியிடங்களை நிரப்பிடக்கோரி, தொடர்புடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் கடிதம் ஒன்றுஅனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் , மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 17 மாவட்டங்களிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் இந்தக் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரு உதவி வரவேற்பாளர் பணியிடத்தினை நிரப்பிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவான வினாக்களும், அவற்றுக்கான விடைகளும்:
1. எந்தெந்த மாவட்டங்களில் இந்தப் பணியிடம் காலியாக உள்ளது?
1. இராமநாதபுரம்.
2. நாமக்கல்,
3. திருப்பூர்.
4. திருச்சி.
5. காஞ்சிபுரம்.
6. திருப்பத்தூர்.
7. தூத்துக்குடி.
8. திருவாரூர்.
9. தேனி.
10. கோயம்புத்தூர்.
11. திருநெல்வேலி.
12. நாகப்பட்டினம்.
13. சேலம்.
14. திருவள்ளூர்.
15. சிவகங்கை.
16. திண்டுக்கல்.
17. வேலூர்.
2. இந்தப் பணிக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதிய விகிதம் எவ்வளவு?
15900 – 50400 Level-2
அதாவது அடிப்படை ஊதியம் 15900, தர ஊதியம்-1400 மற்றும் இதரப் படிகள். தோராயமாக ரூ. 20000 முதல் மாதாந்திர ஊதியம் கிடைக்கும்.
3. யாரெல்லாம் இந்தப் பணிக்குத் தகுதியானவர்கள்?
A. 40 வயதுக்குட்பட்ட நூறு விழுக்காடு பார்வையற்றவர்கள்.
B. எட்டாம் வகுப்பு முடித்திருப்பவர்.
C. ஒயர் நாற்காலி பின்னுவதில் ஓராண்டு அனுபவமுடையவர்.
D. அந்தந்த மாவட்டத்துக்கு இனசுழற்சியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பு: மாவட்ட வாரியான இனசுழற்சிப் பட்டியல் விவரம் இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
4. பணியிடத்தினை நிரப்பிடும் வழிமுறை யாது?
A. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கடிதம் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள், தொடர்புடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மேற்கண்ட நிபந்தனைகளின்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து தகுதியுடைய நபர்களின் பட்டியலைப் பெற வேண்டும்.
B. மாவட்டத்தில் வெளியாகும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழில் பணிவாய்ப்பு தொடர்பான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
C. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியல் மற்றும் நாளிதழ் விளம்பரத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களையும் தொகுத்து, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நேர்முகத் தேர்வினை நடத்தி, தகுதியுடைய நபர்களைத் தெரிவு செய்து சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு இறுதிப் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.
D. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட வாரியான இன சுழற்சி அட்டவணை
| வ. எண் | மாவட்டம் | சுழற்சி எண் | இன சுழற்சி |
| 1 | இராமநாதபுரம் | 4 | Backward Classes (other than Backward Class Muslims) |
| 2 | நாமக்கல் | 5 | General Turn–W(DW) |
| 3 | திருப்பூர் | 6 | Scheduled Castes |
| 4 | திருச்சி | 7 | Most Backward Classes and Denotified Communities –W(DW) |
| 5 | காஞ்சிபுரம் | 8 | Backward Classes (other than Backward Class Muslims)–W(DW) |
| 6 | திருப்பத்தூர் | 12 | Scheduled Castes–W(DW) |
| 7 | தூத்துக்குடி | 13 | Most Backward Classes and Denotified Communities |
| 8 | திருவாரூர் | 14 | Backward Classes (other than Backward Class Muslims)(TM) |
| 9 | தேனி | 15 | Backward Class Muslims |
| 10 | கோயம்புத்தூர் | 16 | Scheduled Castes |
| 11 | திருநெல்வேலி | 17 | Most Backward Classes and Denotified Communities(TM) |
| 12 | நாகப்பட்டினம் | 18 | Backward Classes (Other than Backward Class Muslims)–BC–W |
| 13 | சேலம் | 19 | General Turn–W |
| 14 | திருவள்ளூர் | 20 | Backward Classes (Other than Backward Class Muslims) |
| 15 | சிவகங்கை | 21 | General Turn |
| 16 | திண்டுக்கல் | 22 | Scheduled Castes(TM) |
| 17 | வேலூர் | 23 | Most Backward Classes and Denotified Communities(W) |
சில விரிவாக்கங்கள்:
Backward Classes (other than Backward Class Muslims-முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர்,
W-பெண்,
DW-கைவிடப்பட்ட பெண்
TM-தமிழ்வழியில் பயின்றோர்
ஒரு மாத காலத்துக்குள் உள்ளூர் நாளிதழில் பணிவாய்ப்பு தொடர்பான விளம்பர அறிவிப்பு வெளியாகலாம், காத்திருங்கள்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
