Categories
அஞ்சலி

தொடுகை ஒருங்கிணைக்கும், மறைந்த ஐயா திரு. தீனதயாளன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூடுகை

நாள்: ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி.

மீட்டிங் இணைப்பு:

https://us06web.zoom.us/j/88275724591?pwd=bucLLl2kvbanQB3xIOe03eNLbvYcLS.1

மீட்டிங் குறியீடு:: 882 7572 4591

கடவுக்குறி: 1983

தீனதயாளன்

சிந்தை தீனா என்றழைக்கப்பட்ட திரு. தீனதயாளன் அவர்கள், ஒரு தன்னார்வ வாசிப்பாளராகத் தன்னை இந்தப் பார்வையற்றோர் சமூகத்தோடு இணைத்துக்கொண்டவர்.

ஸ்மைல் என்கிற அமைப்பை ஏற்படுத்தி, பார்வையற்றோருக்கான வாசிப்பு சார்ந்த பணிகள், அவர்களுக்கான தங்கும் விடுதி, சுற்றுலா எனப் பல்வேறு தளங்களில் பார்வையற்றோரை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர்.

பார்வையற்றவர்களை தனது குடும்பத்தின் அங்கத்தினர்களாகக் கருதியவர். அதனாலேயே தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியைப் பார்வையற்ற பெண்களுக்கான விடுதியாக நடத்தி வந்தார்.

பார்வையற்றவர்கள் முன்னெடுக்கும் போராட்டமானாலும், பொழுதுபோக்கானாலும் முன்நின்று ஒருங்கு செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்.

அத்தகைய பண்பாளரான திரு. தீனதயாளன் அவர்கள் நேற்று, 18 ஜூன், 2026 அன்று தனது 78ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆன்மா இளைப்பாறிட வேண்டுகிறேன்

***அரங்கராஜா,

தலைவர். தாய்க்கரங்கள் அறக்கட்டளை.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.