ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்வைக்குறையுடைய மாணவர்களுக்கான ஆறுநாள் வழிகாட்டல் பயிலரங்கு நிறைவுபெற்றிருக்கிறது.
பயிலரங்கின் ஆறுநாள் காணொளிகளையும் கேட்க விரும்புபவர்கள் இந்த
சொடுக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அழைக்கப்பட்ட அனைவருமே மிகச் சிறந்த துறைசார் வல்லுநர்கள் என்பதை தங்கள் பங்களிப்பின் வழியே மெய்ப்பித்திருக்கிறார்கள்.
வல்லுநர்கள் தரப்பில் குறையொன்றும் இல்லை. ஆனால், மாணவர்கள் பக்கம்?…

பயிலரங்கில்,பூவிருந்தவல்லி, தஞ்சை, பாளையங்கோட்டை, ஆரணி, சென்னை சிறுமலர்ப்பள்ளி மற்றும் சென்னை செயின்ட் லூயிஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். அதிலும், இந்த ஆண்டு மாணவிகளிடமிருந்தே அதிகமான ஆனால் மிக நுட்பமான வினாக்கள் வந்தபடியே இருந்தன என்பது பூரிப்பைத் தந்தது.
“சார் நீங்க கஷ்டப்பட்டு ஐஏஎஸ் ஆனீங்க சரி, ஆனா அந்த இடைப்பட்ட காலத்தில உங்க பேரண்ட்ஸ எப்படி உங்களால கன்சோல் பண்ண முடிஞ்சுச்சு?” பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கிற ஒரு மாணவியிடம் இருந்து வந்து விழுந்த கேள்வி இது.
இந்த ஆறு நாட்களின் முடிவில் மாணவர்கள் என்ன பெற்றார்கள் கற்றார்கள் என்பதைவிட, ஒரு சிறப்புப்பள்ளி ஆசிரியராக எனக்கு ஒன்று உணர்த்தப்பட்டுள்ளது. அது சிறப்புக் கல்விச் சூழலிலும் மாணவர்கள் சமமற்ற இரு தரப்புகளாக நிற்கிறார்கள் என்பதே.
அதைவிட சோகம், அப்படி நிற்பதையே அவர்கள் அறியவில்லை என்பது.
சரி எல்லாவற்றையும் நாளை சரி செய்துவிடும் என நம்புவோம்! நம்புவது என்ன, கண்டிப்பாக நாளை என்கிற நாள் எல்லாவற்றையும் சரி செய்துவிடும். சமப்படுத்தி வைக்கும்!
அப்போ நாளைக்கு சந்திக்கலாமா பாஸ்?
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
