சிறுவயதில் உருவான பாடல் எழுதும் பழக்கம் இப்பொழுதும் தொடர்கிறது. முக்கிய விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாழ்வின் ஏதாவது சோகமான தருணங்களைப் பாடலாக வடிப்பது என்று முடிவெடுத்து, சில சமயங்களில் வரிகளை மட்டும் எழுதுவதுண்டு.

காலங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் வீட்டில் முடங்கும் சகோதரிகளுக்கு சாதனைப் பெண்கள் வீடுவீடாகச் சென்று வகுப்பெடுத்தாவது அவர்கள் வாழும் நிலைமாற வழிகாட்ட வேண்டும்.
ஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.