1. விடுதி அம்மாவின் ருசிக்கு நாக்கு ஏங்கும்தான், முதுகு வருடும் அப்பாவோடு அமர்ந்துண்ண தோன்றும்தான்; சுவைதான் நினைப்பென்றால், சொர்க்கம்தான் தாய்மடி, வெலுக்கி நினைவும் வந்துவிடுவதால், விடுதியே சேவடி. 2. கல்யாண விருந்து வீட்டோடு கழிவறை கட்டிவிடும் கனவில் எடுக்காமல் வைத்திருந்த ஏழாண்டுக் கல்வி உதவித்தொகை தங்கையின் கல்யாண விருந்தில் தடபுடலாய் ருசிக்கிறது. மூக்கின் முணுமுணுப்பு, நாக்கின் நர்த்தனம், அடுத்த காட்டு உளாவுக்கு அம்மாவைத்தான் அழைக்கணும். 3. பிறந்தநாள் இன்று அவன் பிறந்தநாள், பரிசாகப் புதுச் சட்டையும் பரஸ்பரம் […]
