நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.
Category: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
கரோனா நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விளிம்புநிலை மக்களான ஊனமுற்றோர், திருநங்கைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான துயர் துடைப்பதையே தங்களின் முதன்மையான செயலாகக்கொண்டு களம்புக வேண்டியது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் கடமை.
மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பிற்கு சுமார் 1.1/2 மணி நேரம் செலவழித்து, எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.
கல்வி பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், பார்வையற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதித் திட்டத்தில் இந்தக் கருவியினை அரசு வழங்கலாம்.
லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
அஞ்சலிகள்: எபிநேசர் என்கிற புஷ்பநாதன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டிஇஎல்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், அவர் உடல்நலிவுற்றமை குறித்தும், அவருக்கு உதவிகள் செய்திட முன்வருமாறும் சவால்முரசு வலைதளத்தில் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். தொடர்ச்சியாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழலில் எதுவும் கைகூடாமல் போனது வருத்தமாய் இருக்கிறது. எனினும், பதிவினைப் படித்த்உவிட்டு, பள்ளியின் முன்னால் ஆசிரியர்களான மறைந்த திரு. போஸ் மற்றும் மறைந்த […]
