மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கியிருக்கிற பஸ் பாஸ் நிமித்தம், பேருந்து நடத்துனர்களிடம் அவமானப்படாத பார்வையற்றவர்களே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசு வழங்குகிற ஒரு விலையில்லாத் திட்டத்தை அமல்ப்படுத்துவதில், ஏதோ தங்கள் வீட்டுச் சொத்தையே தாரைவார்ப்பதுபோல் புழுங்குகிறார்கள் பல நடத்துனர்கள்.
Category: கட்டுரைகள்
ஆசிரியர் சங்கரின் நியாயமான கேள்விகளையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் தங்களுடைய சமூகவலைதளப் பதிவுகளின் வழியே அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்ற முற்போக்குச் சிந்தனையுடைய பகுத்தறிவாளர் ஒவ்வொருவரின் செயலும் போற்றுதலுக்குரியது.
படித்து நல்ல பணியில் இருக்கும் பார்வையற்றவர்களிடம்கூட திருமணம் குறித்த பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. குழப்பங்கள் இயல்புதான், ஆனால், குழம்பிக்கொண்டே இருந்து காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள் பலர்.
உண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.
சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பெயர்களை ஊர்ப் பெயர்கள், மனிதப் பெயர்கள், விலங்கு பெயர்கள், பறவைப் பெயர்கள் என வகைப்படுத்தி ஆராயத் தொடங்குகிறார். ஆராய்ச்சியின்போது, எண்ணற்ற பெயர்களை கண்டுபிடிக்கிறார்.
மனைவியை இழந்து மறுமனம் செய்ய விருப்பமில்லாமல் இன்னொரு தாயாகத் தன் குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு தந்தைக்குள்ளும் தாய்மை பண்பு மறைந்திருக்கின்றது.
பொதுவாகவே பல மருத்துவமனைகளில், “உனக்கே கண்ணு தெரியாது; உனக்கு எதுக்கு புள்ள?” என்பதுதான் பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் கேள்வி.
பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும்.
நீளமும், அகலமும் அதிகரிக்காத நம் ஊர்த் தெருக்களில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
‘எவற்றையெல்லாம் செய்வதற்கு விருப்பம் இருக்கின்றதோ அவற்றை செய்வது மட்டுமல்ல, எவற்றைச் செய்ய விருப்பம் இல்லையோ அவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் சுதந்திரம்’
