தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.
தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.
பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.
மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.
எதிர்பாலினரிடம் தொடுகை வழியே உரையாட இயலாத நிலைக்குத் தன் நண்பர் கன்னியப்பனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சான்று பகர்ந்திருக்கும் ஆசிரியர், இந்தப் பொருண்மையின்கீழ் கொஞ்சம் கூடுதலாக உரையாடி இருக்கலாம் எனப்படுகிறது.
ஈஸ்பீக் உள்ளிட்ட இயந்திரக் குரல்களைப் பழகிக்கொள்வோர்கூட, திறன்பேசியில் க்ரோம் உள்ளிட்ட உலாவி (browser) வழியாக இணைப்பைச் சொடுக்கி, ஸ்வைப் செய்து ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதை சொம்பல் என்பதா இடரல் என்பதா சொல்லத் தெரியவில்லை.
அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார்.
யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களில் இடையீடாகவோ அல்லது பிற்சேர்க்கை என்ற பெயரிலோ, தரவுத்தாள்கள் திணிக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே அட்டவணைகள் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கும்.
ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.
6 ஆகஸ்ட், 2020மாற்றுத்திறனாளிகள் வரலாற்றில் அவர்களால் அவர்களுக்காகப் படைக்கப்பட்ட முதல் கிண்டில் மின்னிதழ் சவால்முரசு. இன்று (6.ஆகஸ்ட்.2020) பிற்பகல் 1.30 முதல், நாளை (7.ஆகஸ்ட்.2020) பிற்பகல் 1.29 வரை இலவசம், இலவசம், முற்றிலும் இலவசம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கிப் படியுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுச்சமூகத்திற்கும் இடையேயான உரையாடல் தொடங்கட்டும். உலகெல்லாம் பரவட்டும். சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம். சவால்முரசு மின்னிதழ்: ஜூன் மற்றும் ஜூலை 2020 இதழ்கள் (Tamil Edition) இதழைப் பதிவிறக்க, […]