உலகப் பெண்கள் தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளி பெண்களின் வாழ்வியல் மிக விரிவாகப் பேசப்பட வேண்டும் என விழைகிறது சவால்முரசு. எனவே இந்த மாதம் முழுவதும் சவால்முரசின் வழக்கமான கட்டுரைகளுக்கிடையே மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் அவர்கள் குறித்த மாற்றுத்திறனாளி அல்லாத இருபாலரின் படைப்புகளை வரவேற்கிறது ஆசிரியர்க்குழு. மாற்றுத்திறனாளிப் பெண்களே! உங்கள் படைப்புகள் எதைப்பற்றியும் இருக்கலாம். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதுமையான சமையல்/அழகு/வீடு பராமரிப்புக் குறிப்புகள், நீங்கள் படித்த புத்தகம் பற்றிய பத்திகள், உங்கள் சொந்த அனுபவங்கள் என எது […]
Category: இதழிலிருந்து
மகளிர்தின ஸ்பெஷல்: இருளும் ஒளியும்
இனி பார்வைக்கே வாய்ப்பில்லை, இருப்பதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டேதான் போகும் என்ற நிலையில், ஒரு மனைவியாய், தாயாய், புகுந்த இடத்தில் தன் இருப்பைப் பெருமையோடு முன்வைக்க விரும்பிய அவருக்குப் பேரதிர்ச்சி. எண்ணற்ற கனவுகளும் கற்பனைகளும் கொண்டிருந்த தனது வண்ண உலகம் வசீகரமிழந்துவிடப்போகிறது என்ற உண்மைக்கு முகம் கொடுக்க நேர்கிற ஒரு பெண்ணின் மனநிலையை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.
நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும் எத்தனைமுறை வந்து சென்றோம், எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்? கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள், அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால் […]
மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வேண்டும் ஓர் அவசரகால நடவடிக்கை
மாணவர்களிடமிருந்து எழும் மன உலைச்சல் என்ற வார்த்தை வெறும் படிப்போடு மட்டும் தொடர்புடயது அல்ல. அது அவர்களுக்கும் அவர்களின் வீடு, சுற்றுப்புறம், குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணிகளோடு தொடர்புகொண்டது.
மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் தொடங்கியாயிற்று. விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்பது எழுதப்பட்டிருக்கும் விதி அவ்வளவுதான். தேர்வு,எதிர்காலம் குறித்த கவலைகளில் பெற்றோர்கள் துணிந்துவிட்டார்கள். முடங்கிக் கிடத்தல் தந்துவிட்ட சளிப்புக்கும் தனிமைக்கும் ஆறுதலாய் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கின்றன பல கொடுத்துவைத்த செல்லங்கள். ஆனால், இங்கே எதற்கும் எப்போதும் பொறுப்பேற்க முன்வராத பல அதிகார பீடங்களால், தங்களின் நிலை என்னவென்றே அறியாமல் எப்போதும் குழப்பமும் திகைப்புமாய் இல்லப்பட்டிகளில் ஒரு எல்லைவரை வருவதும், எட்டிப் பார்த்துத் […]
• ஊனமுற்றோரின் வளர்ச்சியைப் பெரும் அக்கறையோடு அணுகுவதாகக் காட்டிக்கொள்கிற நடுவண் அரசு, அதனைப் பறைசாற்றும் பொருட்டு தொடங்கிய அக்சஸ் இந்தியா கேம்பைன் (Access India Campaign) பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேச்சே இல்லை.
உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். 1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் இரவீந்திரன் அவர்கள், […]
இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.
