சினிமா: ஒரு செய்தி சொல்லட்டுமா?

சினிமா: ஒரு செய்தி சொல்லட்டுமா?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

சினிமா: “ஓடலாம் முடியாது, ஆனா சண்டை செய்ய முடியும்”

சினிமா: "ஓடலாம் முடியாது, ஆனா சண்டை செய்ய முடியும்"

எதிர்வரும் மே 10, 2024, ஹிந்தித் திரைப்படமான ஸ்ரீகாந்த் வெளியாக இருப்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. இப்போது அறியாத புதிய செய்தி சொல்லட்டுமா?

அந்தத் திரைப்படத்தைப் பிறருடைய உதவியின்றி திரையரங்கில் பார்க்க விரும்பும் பார்வைக்குறையுடையவர்கள் நீங்கள் என்றால், திரைப்படத்துக்கான டிக்கெட்டை புக் மை ஷோ போன்ற தளங்களின் வழியே பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே ப்லே ஸ்டோரில் எக்சல் சினிமா ஆப்பையும்

XL Cinema

பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஹெட்போனுடன் திரையரங்கு செல்லுங்கள்.

படம் தொடங்கியவுடன், எக்சல் சினிமா ஆப்பைத் திறந்து அதில் ஸ்ரீகாந்த் டிக்கெட் எனச்சொல்லும் இடத்தில் டாப் செய்தால், திரையோடு அது ஸிங்க் ஆகி, திரையில் காட்சிகள் ஓட, உங்கள் காதுகளில் ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் ஒலித்தபடியே இருக்கும்.

இதை நான் சொல்லவில்லை. படத்தின் நாயகனே சொல்கிறார்

கேளுங்களேன்!

அத்தோடு இன்னொரு செய்தி.

உங்கள் திரைப்பட அனுபவத்தைப் பகிர, சர்வதேச/ஆசியா/இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நீங்களும் பங்கேற்க,

படத்துக்கான டிக்கெட், திரையரங்கில் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் உங்கள் அனுபவத்தையும் இந்த கூகுல் படிவத்தின் வழியே நீங்கள் பகிரலாம்.

https://forms.gle/chf9FT8J4xvpBUSM7

இதையெல்லாம் தனது எக்சல் சினிமா, நோபோஃப்லிக்ஸ் போன்ற செயலிகளின் வழியே சாத்தியப்படுத்திவரும் திருமதி. தீப்தி பிரசாத் அவர்களைத் தொடர்புகொள்ள:

9811787959

தீப்தி பிரசாத்

இவர் ஒரு குழுவைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, தன்னார்வமாகவே பல ஹிந்தித் திரைப்படங்களை ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் செய்கிறார். அவற்றை நாம் நோபோஃப்லிக்ஸ்

(Nobaflix)

என்ற செயலியின் வழியே பார்க்கவும் கேட்கவும் வகை செய்திருக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது அந்த ஆப்பில் நமது ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையைத் தந்து பதிவு செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு ரூ. 349 சந்தா செலுத்த வேண்டும். இந்தச் சந்தாவைச் செலுத்த இயலாதவர்கள், நன்கொடையாளர்களுக்கான வேண்டல்களையும் இதே ஆப்பின் வழியே தரலாம். அதுவும் பரிசீலிக்கப்படும்.

நான் அவர்களின் சமீபத்திய வெளியீடான கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் பகுதி (1) பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது படம் மற்றும் ஒலிவழிக் காட்சி வர்ணனை.

பிறமொழித் திரைப்படங்களையும் தற்போது முயன்று வருவதாகச் சொல்கிறார் இவர்.

இதே முயற்சியை நம் தன்னிகரற்ற தமிழ்நிலத்தில் மேற்கொள்ள விரும்பும் எவரும் திருமதி. தீப்தி பிரசாத் அவர்களிடம் பேசிப் பார்க்கலாம்.

கல்வியில், வேலைவாய்ப்பில் மட்டுமல்ல,

பொழுதுபோக்கிலும் கலையிலும்கூட சம பங்கேற்பை உறுதி செய்வதே உண்மையான சமத்துவப் பார்வை.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *