நம்பர் 1: ஹலோ சார்! நான் பயாலாஜி படிச்சு சைன்ட்டிஸ்ட் ஆக விரும்புறேன்.
நம்பர் 2: Hello Sir! I want to be an IAS officer.
நம்பர் 3: Hello Sir! I want to be a space scientist, and to be the first man on Marse.
நம்பர் 4: ஹலோ சார்! நான் நாட்டோட first visually impaired president ஆக விரும்புறேன்.
கலாம்: what is your name young man?
“Sir, my name is Srikanth Polla”.

“என்னால ஓடலாம் முடியாது. ஆனா சண்ட செய்ய முடியும்”.
“இந்தியன் எஜுகேஷன் சிஸ்டத்தில விஷுவலி இம்பைர்ட் ஆர்ட்ஸ் படிக்கத்தான் அனுமதி உண்டு”.
“நான் படிச்சா சைன்ஸ்தான் படிப்பேன்”.
“என்ன பண்ணலாம்?”
“கேஸ் போடலாம்”.
“யாருமேல?”
“இந்தியன் எஜுகேஷன் சிஸ்டத்து மேல”.
“பணம் கொடுத்தாக்கூட யாருக்கு அட்மிஷன் தரமாட்டோமுணு சொன்னாங்கலோ, அவர உலகத்துல ரொம்ப ஃபேமசா இருக்கிற நாளு யுனிவர்சிட்டிஸ் ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்கக் கூப்பிட்டாங்க”.
Mr. “ஸ்ரீகாந்த்! நியூட்டன் தெரியுமா?”
“கிராவிட்டி கண்டுபிடிச்சவரு. அதுக்கு அர்த்தம் அதுவரைக்கும் ஆப்பிள் கீழ விழுந்து யாரும் பார்க்கலைங்கிறது இல்ல சார். கிராவிட்டி பத்தி யாரும் யோசிக்கலை அவ்வளவுதான்”.
“எங்களப்பத்தி என்னென்னவோ கதைலாம் உங்க மண்டைக்குள்ள இருக்கும்ல?
பாவம்! இவனுக்குப் போயி இப்படியா? அப்படினு என்னென்னமோ.
நாங்கபாவம்லாம் கிடையாது.
எங்ககிட்ட வச்சுக்கிட்டா, வித்து சாப்டுறுவோம்”.
ராஜ்கம்மார் ராவ் மற்றும் ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’. நிஜநாயகனின் கதை.
மே 10 முதல் இந்தியத் திரையரங்குகளில்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு பார்வையற்றவனுக்கு பொறியியல் படிப்பதே கனவுஇலட்சியம் எல்லாம்.
அனுமதிக்காத இந்தியக் கல்விமுறையின் மீதே வழக்கு தொடுத்து வென்றார். 11,12 ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடம் படித்தார். இறுதித் தேர்வில் 98% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
98 என்ன நூற்றுக்கு நூறே என்றாலும், சாமானியர்கள் அணுக இயலாத I.I.T. பொல்லாவையும் வெளித்தள்ளியது. ஆனால், கல்வி உதவித்தொகையுடன் பொறியியல் படிக்க அமெரிக்காவின் நான்கு பல்கலைக்கழகங்கள் அவருக்குச் சிவப்புக் கம்பளங்கள் விரித்தன.

அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் படித்தார். இதன்மூலம், அந்தப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவில் பொறியியல் படிக்கும் வாய்ப்பு பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
எத்தனையோ அமெரிக்க வாய்ப்புகளை மறுத்து, இந்தியாவில் பல்வகை ஊனமுற்றவர்களுக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியதோடு, பிரெயில் அச்சகம் ஒன்றையும் நிறுவினார்.
தன்னுடைய பொல்லாண்ட் நிறுவனத்தின் மூலம் பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார்.
அந்த நிறுவனத்தின் இன்றைய மொத்த மதிப்பு 480 கோடி.
நல்லாவே சண்டை செஞ்சிருக்கீங்க பாஸ்.
கூடுதல் இணைப்புகள்:
ஸ்ரீகாந்த் பொல்லா விக்கிப்பீடியா
ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ – யார் இவர்?
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “சினிமா: “ஓடலாம் முடியாது, ஆனா சண்டை செய்ய முடியும்””
Very inspiring story, keep it up
LikeLike
ஒரு பார்வையற்ற சாதனையாளரின் வாழ்க்கை திரைப்படமாக வெளியாக போகிறது என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. திரைப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி.
LikeLike