
ஒவ்வோர் ஆண்டும், சாகித்ய அகாடமி எழுத்துத் திருவிழா (Festival of Letters) என்ற பெயரில் நாடு தழுவிய இலக்கிய விழாவினைக் கொண்டாடி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டிற்கான எழுத்துத் திருவிழா 11 மார்ச், 2024 திங்கள்கிழமை தொடங்கி, 16 மார்ச், 2024 சனிக்கிழமைவரை தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் விழாவின் இறுதி நாளில், அதாவது 16 மார்ச், 2024 அன்று, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் பங்கேற்கும் ‘அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகையினை (All India Differently Abled Writers’ Meet) அகாடமி ஒருங்கிணைக்கிறது. இவ்வாறான ஒருங்கிணைப்பு இதுவே முதன்முறை என நினைக்கிறேன். நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து நான் பங்கேற்கிறேன்.

எதிர்வரும் சனிக்கிழமை மார்ச் 16 அன்று, காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டமானது, கவிதை அரங்கு, ‘இலக்கியம் எனக்கு என்ன செய்தது’ என்ற தலைப்பில் நிகழும் பேச்சரங்கு மற்றும் சிறுகதை வாசிப்பு அரங்கு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றுள், சிறுகதை அரங்கில் முன்னிலை வகிப்பதோடு, எனது முதல் சிறுகதையான
ஆங்கிலத்தில் வாசிக்க இருக்கிறேன்.
தேவகிருபையை எனக்காக
மொழிபெயர்த்துத் தந்த மதிப்பிற்குரிய வாசிப்பாளர் திருமதி.
மற்றும் எனது அருமை நண்பர் முனைவர்.
இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

7 replies on “அறிவிப்பு:சாகித்ய அகாடமி ஒருங்கிணைக்கும், அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகையில் பங்கேற்கிறேன்!”
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
LikeLike
சாகித்திய அகாடமி ஒருங்கிணைப்பு குழுவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கும் நாம் அனைவரும் அறிந்த எளிய மற்றும் உண்மையான உழைப்பவர் திரு.சரவணமணிகண்டன் சார் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள் 👍👍👍💖💖💖
LikeLike
தமிழகத்திலிருந்து இந்நிகழ்வில் ஒருவர் கலந்து கொள்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சி. அதிலும் நீங்கள் அந்நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பது உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
LikeLike
வாழ்த்துக்கள்…
LikeLike
ஆஹா! மட்டற்ற மகிழ்ச்சி சார்! பதிவினைப் படித்ததும் பூரித்துப்போனேன்!
பங்கேற்கிறேன் என்ற தங்களின் வரியைக் கண்டு மகிழ்ந்த நான் உள்ளே படித்ததும் தாங்கள் தலைமை ஏற்கிறீர்கள் என்பதை அறிந்ததும் உள்ளபடியே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனேன். மனமார்ந்த வாழ்த்துகள் சார்!
தேவகிருபையை ஒருநாளும் மறந்துவிட முடியாது. மறக்கக்கூடிய காட்சிகளா அது? பெயரைக் கேட்டதும் மனதுக்குள் கிருபை பொங்கிவழிகிறது.
தேவகிருபையினால் தாங்கள் மெம்மேலும் பல உயர்வுகளை அடைந்து விரைவில் சாகித்ய அகாதமி விருது பெற வாழ்த்துகள் சார்!
தாங்கள் பகிர்ந்திருந்த அழைப்பிதழின் மூலம் மிகச் சிறந்த சமூகப்போராளியும், எங்களின் பார்வையற்ற வங்கிப் பணியாளர் நலச் சங்கத்தின் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளருமான திரு. ராஜேஷ் அசுதானி சாரும் முதல் அமர்விற்கு தலைமை ஏற்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் சார்.
சமீப காலமாக தங்களின் உழைப்பை வலையொளிக்காக செலவிடுகிரீர்கள் என்பது எனக்கு உண்மையிலேயே சற்று வருத்தமாக உள்ளது. தங்களின் எழுத்து பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தால் எழுந்த வருத்தமேயன்றி வேரில்லை.
ஆர்வமுள்ள தம்பிகள், தங்கைகள் வலையொளிப் பணியை தன்னார்வமாக வந்து பொருப்பேற்றால் சரியாக இருக்கும்.
காலம் கைக்கூடும் காத்திருப்போம்.
தங்களின் எழுத்துப்பணி தடையின்றி தொடர மனமார்ந்த வாழ்த்துகள் சார்!
LikeLike
Hearty congratulations!
LikeLike
[…] சாகித்திய அகாடமி கூட்டத்தில் […]
LikeLike