பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு.

CSGAB போராட்டக்களம்: நாள் பதினைந்து

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

              அழைப்பிதழ்! தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரிகள் ஓய்வூதிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் கடந்த 15 நாளாக சென்னை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக முன் பார்வையற்றோர் கல்லூரி மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நம் நண்பர்கள் 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரிப் போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

                  அதனை இவ்வரசுக்கு வலியுறுத்துவதற்காக நம் மாவட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைத்து நண்பர்களும் கண்டன கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே 27 2 24 செவ்வாய் மாலை 4 00மணிக்கு நாம் ஒன்றிணைந்து நடத்த உள்ளோம். அதற்கான விண்ணப்பத்தையும் ஒன்பது அம்ச கோரிக்கைககளையும் இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் நம் சார்பாக கொடுக்க உள்ழோம். இந்த கண்டன முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் விரைந்து வாரீர் ஒன்பது அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் அற்புதத்தைப் பாரீர் வருக வருக நல்லா தரவைத் தருக தருக என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் 

15 ஆம் நாள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்ட அறிவிப்பும் அழைப்பும்:

நாள்: 26/02/2024. நேரம் காலை 9 30 மணி. 

குறிப்பு:

நம் சமூகத்தின் உறிமை மீட்புக்கான இந்த போராட்டம் முடிந்துவிட்டது என்ற வதந்தி சில விஷமிகளால் ஆங்காங்கே பரப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை! நமது 9 அம்ச கோறிக்கைகளுள் எந்தெந்த கோறிக்கைகள் நிரைவேற்றப்படும் என்பதை அரசு சார்பில் உறிய அமைச்சரின் வாயிலாக செய்திக் குறிப்பு வெளியிட்டால் மட்டுமே நமது போராட்டம் முடிவுற்கு வரும். இதுவே நம் உண்ணாவிரத தியாகிகளின் நிலைப் பாடும் ஆகும்!

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க உறவுகளே!

உங்கள் அனைவருக்கும் வீரத்துடன் கூடிய போராட்ட வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

ஆளும் வர்க்கத்தின் கைவிரிப்புகளால் நாம் ஓய்ந்துவிடக்கூடாது என்ற உத்வேகத்தில் இன்று காட்டுப்பாக்கம் பகுதியில் நடத்தப்பட்ட சாலை மரியல் அரை மணி நேரம் நீடித்தது. காவலர்களும் நம்மை நல்ல முறையில் நடத்தினார்கள். அதற்கு காரணம் இன்றைய நமது பலம். இந்த பலம் நீடித்தால் நம் போராட்டம் அரசின் கவணத்தை ஈர்க்கும். காலையில் கைதாகி மாலையில் மீண்டு நம் இடம் சேர்ந்த பின் இன்றைய போராட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுத்துவிட்டோம் என்று நிரைவடைந்து விடுகிறோம். ஆனால்

காயப்பட்ட பார்வையற்றோருக்கு மனக்குமுரல்கள், உண்ணா விரதம் இருப்பவர்க்கோ உயிர் வேதனை! தாக்கப்பட்ட பெண்களுக்கோ மன உளைச்சல் என்று நம் சகோதர சகோதரிகளின் போராட்ட பாதிப்பு சொல்லி முடியாது. இதற்கெல்லாம் மருந்து நம்மிடம் இருக்கும் போராட்ட குணம் மட்டுமே!

 நண்பர்களே! கருவரையில் தொடங்கும் நமது போராட்டம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிப்புகளுக்காகத் தொடர்ந்தது. பேருந்து பயணச்சீட்டுகளுக்காகவும் போராடினோம்! இன்னும் வேலைவாய்ப்புகள், உள்ளிட்ட வாழ்வுறிமைகளுக்காகவும் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்! எல்லாவற்றையும் நமது சங்கம்தான் முன் நின்று நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறது. 

இப்போது நமது வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பினையும் மையப்படுத்தி கடந்த 14 நாட்களாக நடைபெறுகின்ற அறப்போராட்டத் தேரானது இது வரையிலும் மாணவர்களின் பேராதரவோடு சீறிய முறையிலும், உற்சாக எழிச்சியுடனும் வடம் பிடிக்கப்பட்டு தற்போது வீதியில் நிற்கிறது. பார்வையற்றோருக்கு மட்டும் அரிவிக்கப்படாத 144 தடை விதிக்கப்பட்டது போல நடந்துகொள்கிறது காவல் துறை. மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் இல்லை. அதனால் வீட்டுக்கு போகவேண்டிய அவலம். இந்த நிலையில் வெளியூர்களில் இருக்கும் பணி நாடுனர்கள் நினைத்தால் மட்டுமே இந்த போராட்டத்தினை வென்றெடுக்கவியலும். கூட்டம் குரையக்குரைய ஊடகங்களின் ஆதரவும் குரையத் தொடங்குகிறது. கூடிய மட்டும் போராடுவார்கள், முடியாத போது அவர்களே கலைந்துவிடுவார்கள் என்று காவலர்கள் அவர்களுக்குள்ளேயே கேலி பேசுகின்ற அவலங்களும் தற்போது அரங்கேறுகின்றன. 

நமக்குள் இருக்கும் சில சமூக விரோதிகள் எனும் கருப்பாடுகளின் உதவியோடு முன்னணிப் போராளிகளின் வீடுகளைக் கண்டறியும் காவலர்கள், வீடுகளுக்குச்சென்று வீட்டு உறிமையாளர்களை மிரட்டி வரும் கொடுமைகள். என சென்னையில் வசிக்கும் பார்வையற்றோர்களுக்கு இந்த காவல் துறையும் அரசும் செய்யும் அனீதிகளை வெளியூர்களில் வசிக்கும் பார்வையற்றோர்கள் நினைத்தால் மட்டுமே சரி செய்யமுடியும். இதற்கு யாவரும் போராட்டத்துக்கு வந்து நமது சங்கத்துக்கு முன்னோர்கள் சேர்த்துவைத்த மாண்பினைக் கட்டிக் காத்திடவும் உறிமைகளை வென்றெடுக்கவும் வாரீர் வாரீர் என்று இருகரம் கூப்பி அழைக்கிறது நமது செயற்குழுவும் போராட்டக் குழுவும். 

பகலெல்லாம் பட்டினிக்கிடந்து, இரவுகளில் வெரும் வயிறு கலங்க பேருந்தில் கிளாம்பாக்கம் சென்று மீண்டும் சென்னைக்கு வந்து தங்களது போராட்டங்களை தொடங்கினார்கள் நம் உண்ணாவிரத வீரப்போராளிகள். நான்கு நாள் அலைக்கழிப்புகளுக்குப் பிரகே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்னால் நமது அலைக்கழிப்புகள் மிகச் சாதாரணமானது. 

ஆகவே எதற்கும் துனிந்து வா எம் எழிச்சி மிக்க சமூகமே!

தங்கவும் இடம் தருகிறோம் தடைகள் தாண்டி வாருங்கள். அச்சம் தவிர் என்ற மாகவியின் சொல்லுக்கு இலக்கணமாய் எழுந்துவா எம் உடன்பிறப்பே!

இப்பொழுது இல்லை என்றால் இனி எப்பொழுதும் இல்லை!.

ஒரு சில நாள் தியாகம் பல நாள் நம்மை வாழவைக்கும்!

மாற்றுத்திறணாளி என்ற வார்த்தை மட்டுமே நம்மை மாற்றிவிடாது! வாழ்வில் ஏற்றம் காண போராட்டத் தேரை வடம் பிடிக்கவா, வாகை சூடவா! பார் போற்றும் எம் பார்வையற்ற சமூகமே! 

வேலை கேட்டு வந்த நம்மை வீணர் என்று பிதற்றுகின்ற அவர்களுக்கு நம் ஒற்றுமையின் பலம் எத்தகையது என்று புரியவைக்கும் நேரமிது.

ஒருங்கிணைந்து போராட உறிமையுடன் அழைக்கிறோம் அணி திரண்டு வா எம் சமூக உடன் பிறப்பே!

மேலதிகத் தொடர்புக்கு:  

+918825979533 7449158045, 7904751694.

பார்வையின் மையும் போராட்டமும்- முனைவர். ரா. பெரியதுரை

 ‘ போராட்டமே வாழ்க்கை “

 என்ற தத்துவம் சராசரி மனிதர்களுக்கு முற்றிலும் பொருந்தாதது.

 அது உடற்குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கான தத்துவம் அதிலும் குறிப்பாக பார்வையின்மையால் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் பார்வையற்ற போராளிகளுக்கு சொந்தமானது_.

 அப்படி கருதுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. உடல் குறைபாடு அற்றவர்கள் தங்கள் தேவைகளை தேடுகிறார்கள் போராடுவது இல்லை.

 அப்படிப் போராடும் தேவை ஏற்படுமே ஆனால் அவர்களுக்கு உடல் உறுப்புகள் உதவக்கூடும்.

 போராட சோம்பல் கொண்டவர்கள் சக மனிதனை தாக்க நவீன ஆயுதங்களை கூட கண்டுபிடித்து விட்டார்கள்.

 பிறரோடு ஒப்பிடுவதற்காக இதை சொல்லவில்லை எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதற்காகத்தான் இந்த முயற்சி.

 இருளில் வாழும் சமூகத்திடம் இருள் குறித்த ஒரு அச்சம் இருக்கும் புறக் கண்களால் பார்க்கிறவர்களே இந்தவித அச்சத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?

 ஏன் உணரவில்லை? அதனால்தானே சூரிய ஒளியை மிஞ்சுமலவிற்கு வெளிச்சம் கண்டுபிடித்து இருக்கிறோம் என்று நீங்கள் சொல்வது என் காதிலும் விழுகிறது

 இந்தக் கட்டுரை உங்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இல்லை மாறாக பார்வையற்றோரின் நியாயமான உணர்வுகள் தேவைகள் இவற்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

 தாயின் கருவறையில் இருந்து புறம் தள்ளிய நாள் தொடக்கம் கல்லறை மட்டும் இந்தப் பார்வையற்ற சமூகம் தமது எல்லாவித தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள போராடும் போராட்டங்கள் இருக்கின்றனவே அப்பப்பா விவரிக்க வார்த்தைகள் ஏது?

 மண்ணைத் தொட்டு தடவி உணர்ந்து கொள்வது முதல் விண்ணை பற்றி கேட்டு தெரிந்து கொள்வது வரை

 இந்தப் பிரபஞ்சம் ஏராளமான தடைகளை வைத்திருக்கின்றன இந்த பார்வையற்ற சமூகம் போராடுவதற்காக..

 தாய் தரும் உணவை பற்றி பிடிப்பதில் போராட்டம், பெற்றோரின் அன்பை பெறுவதில் போராட்டம், பங்காளியுடன் உரிமையை பெறுவதற்கான போராட்டம்,

 இப்படி குடும்பத்தோடு போராட்டங்கள் முடிந்து விடுவதில்லை இருளை

 விழிகளில் பூசியபடியே தொடர்கின்றன போராட்டங்கள்.

 கல்வியைப் பெறுவதில்-

 சிறப்பு பள்ளிகளை தேடி அலைவதில் பெற்றோர் சந்திக்கும் போராட்டம் பார்வையற்றோருக்கு அருகில் சிறப்பு பள்ளி அமைந்து விடுவதில்லை அதுவும் போராட்டம் தான்.

 சிறப்பு பள்ளிகளில் இடம் கிடைத்த பிறகுதான் பார்வையற்றோர் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

 பிரபஞ்சம் குறித்த கேள்விகள் இயற்கை குறித்த தேடல்கள்

 அருகில் இருப்பவை தொலைவில் இருப்பவை இவை அனைத்தையும் உணர்ந்த பிறகு ஞானக் குளியல் போட்டு முடித்தது போல் பார்வையற்றோர் ஒரு புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.

 தொடரும் போராட்டங்கள்-

 உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி பாடங்களை புரிந்து கொள்வதில் உருவாகும் சிக்கல்கள் இங்கே தான் தொடங்குகின்றன.

 போராடி முயற்சித்து பாடங்களை கற்றுக் கொண்டாலும் தேர்வு எழுதுவதில் எழும் சிக்கல்கள் போராட்டங்களாக உருவெடுக்கின்றன

 இவர்களுக்காக தேர்வு எழுத வருபவர்கள் இவர்கள் சொல்வதை சரியாக எழுதுகிறார்களா என்பதை தெரிந்து கொள்வதில் போராட்டம்.

 இந்தப் போராட்டத்தில் சிலர் வெற்றி பெற தவறுவதும் உண்டு

 இத்தகைய போராட்டங்களும் சிக்கல்களும் போட்டி தேர்வுகள் வரை தொடர் கதைகளாய் தொடரத்தான் செய்கின்றன.

 உயர்கல்வி தொழில் கல்வி

 கல்லூரிகளிலும் தொழில் நிறுவனங்களிலும் இடம் கிடைத்து விட்டாலும், கல்விக் கட்டணங்களை செலுத்த போதிய நிதி ஆதாரங்கள் இடம் இருப்பதில்லை. காரணம் பார்வையற்றோரில் பலர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்.

 படித்து விட்டோம், பட்டமும் பெற்று விட்டோம், பணிகளை செய்வதற்கும் தகுதியைப் பெற்று விட்டோம் என்று கருதி இவர்கள் மகிழ்ச்சியாய் இருந்துவிட முடியாது.

 பணி நியமனம் பெறுவதற்காக பார்வையற்றோர் அரசிடம் போராடி இட ஒதுக்கீட்டினை பெற வேண்டி இருக்கிறது.

 அப்படிப் பார்வையற்றோர் அரசுடன் கடும் போராட்டங்களை மேற்கொண்டு இட ஒதுக்கீட்டினை பெற்றிருந்த போதிலும் அத்தகைய அரசாணைகளை செயலுக்குக் கொண்டு வருவதற்காக இன்றைய நாள் வரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 போராட்டக் களமும் பார்வையற்றோரும்

 கடந்த 12 ஆண்டுகளாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

 பிறகு கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்கள் இருக்கின்றன அரசுக்கு?

 அரசை புதிய சட்டம் இயற்ற சொல்லவில்லை பார்வையற்ற மாணவர்கள்

 இருப்பதை தானே அமல்படுத்த சொல்கிறார்கள்

 நீங்கள் தேர்தலின் போதும் வெற்றி பெற்ற பிறகு சட்டப்பேரவையில் சொன்னவற்றைத்தானே நிறைவேற்ற சொல்கிறார்கள்?

 பணி நியமனம் பெற்ற பார்வையற்றோர் பிறருக்கு சமமாக தானே அரசுப் பணியினை செய்து வருகின்றனர் பிறகு என்ன தயக்கம் அரசுக்கு?

 ஒடுக்குமுறைகளும் பாகுபாடும்

 காவல்துறையினர் பார்வையற்றோரை கண்மூடித்தனமாக தடிகொண்டு தாக்குவது, விளக்கை அணைத்துவிட்டு பார்வையற்றோரை தாக்குவது, உண்ணாவிரத தியாகிகளை அரசு மருத்துவமனை வாசலில் வீசி எறிந்து விட்டு போவது, சிறிதும் கூச்சம் இல்லாமல் பார்வையற்ற பெண்களை ஆண் காவலர்கள் ஆடையை பற்றி எழுப்பது தொட்டு தூக்குவது விடுதியில் தங்கி படிக்கும் பார்வையற்ற மாணவர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்வது, பார்வையற்றோருக்கு வாடகை வீடு கொடுத்திருப்பவர்களை,

 பார்வையற்றோரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தானே? ஏன் பார்வையற்றோரை சொந்த மண்ணில் அகதிகளை போல நடத்துகிறீர்கள்?

 பார்வையற்றோரின் வேண்டுகோள் ஆடும் கட்சியினரே எதிர்க்கட்சியினரே சமூக ஆர்வலர்களே மனித உரிமை காப்பாளர்களே ஏன் எங்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ள மறுக்கிறீர்கள் ஏன் இந்த மௌனம்?

 சில ஊடகங்களை தவிர பல ஊடகங்கள் பார்வையற்றோரின் நியாயமான போராட்டம் பற்றி பேசுவது கூட இல்லை

 நல்லவர்களே சமூக நீதிப் பேசுபவர்களே பார்வையற்றோர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் 15 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்துபவர்களை போய் பாருங்கள்

 இந்தக் கட்டுரையில் பார்வையற்றோர் சந்திக்கும் போராட்டங்கள் பற்றி சொன்னவை கொஞ்சம் மிச்சத்தை சொல்வதானால் மனசாட்சி உள்ளவரின் கண்கள் குளமாக கூடும்..

 இறுதியாக ஒரு வேண்டுகோள் காவல்துறையினரே பார்வையற்றோரை நள்ளிரவில் சுடுகாட்டில் இறக்கி விடாதீர்கள்

 அது பார்வையற்றோரை இறுதியாத்திரைக்கு வழி அனுப்பி வைப்பதற்கு சமமானது

 பார்வையற்றோர் போராட்டங்கள் குறித்து எழுதக்கூடிய இந்த எனது கட்டுரை இறுதிக் கட்டுரையாக இருக்கட்டும்.

 தொடர்புக்கு 944271577

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *