பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின்
14 ஆம் நாள் உண்ணாவிரதம் மற்றும் போராட்ட அறிவிப்பு:
நாள்: 25/02/2024. நேரம் காலை 10 மணி.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க உறவுகளே!
உங்கள் அனைவருக்கும் வீரத்துடன் கூடிய போராட்ட வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
ஆளும் வர்க்கத்தின் கைவிரிப்புகள், காவல் துறையின் அத்துமீரல்கள், காயப்பட்ட பார்வையற்றோரின் மனக்குமுரல்கள், உண்ணா விரதம் இருப்பவர்க்கோ உயிர் வேதனை!
பெண்களை தாக்கும் அயோக்கியத்தனங்கள்,
இதுதான் நமது போராட்டத்தின் நிலை!
நண்பர்களே! கருவரையில் தொடங்கும் நமது போராட்டம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிப்புகளுக்காகத் தொடர்ந்தது. பேருந்து பயணச்சீட்டுகளுக்காகவும் போராடினோம்! இன்னும் வேலைவாய்ப்புகள், உள்ளிட்ட வாழ்வுறிமைகளுக்காகவும் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்! எல்லாவற்றையும் நமது சங்கம்தான் முன் நின்று நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறது.
இப்போது நமது வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பினையும் மையப்படுத்தி கடந்த 13 நாட்களாக நடைபெறுகின்ற அறப்போராட்டத் தேரானது இது வரையிலும் மாணவர்களின் பேராதரவோடு சீறிய முறையிலும், உற்சாக எழிச்சியுடனும் வடம் பிடிக்கப்பட்டு தற்போது வீதியில் நிற்கிறது. பார்வையற்றோருக்கு மட்டும் அரிவிக்கப்படாத 144 தடை விதிக்கப்பட்டது போல நடந்துகொள்கிறது காவல் துறை. மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் இல்லை. அதனால் வீட்டுக்கு போகவேண்டிய அவலம். இந்த நிலையில் வெளியூர்களில் இருக்கும் பணி நாடுனர்கள் நினைத்தால் மட்டுமே இந்த போராட்டத்தினை வென்றெடுக்கவியலும். கூட்டம் குரையக்குரைய ஊடகங்களின் ஆதரவும் குரையத் தொடங்குகிறது. கூடிய மட்டும் போராடுவார்கள், முடியாத போது அவர்களே கலைந்துவிடுவார்கள் என்று காவலர்கள் அவர்களுக்குள்ளேயே கேலி பேசுகின்ற அவலங்களும் தற்போது அரங்கேறுகின்றன.
நமக்குள் இருக்கும் சில சமூக விரோதிகள் எனும் கருப்பாடுகளின் உதவியோடு முன்னணிப் போராளிகளின் வீடுகளைக் கண்டறியும் காவலர்கள், வீடுகளுக்குச்சென்று வீட்டு உறிமையாளர்களை மிரட்டி வரும் கொடுமைகள். என சென்னையில் வசிக்கும் பார்வையற்றோர்களுக்கு இந்த காவல் துறையும் அரசும் செய்யும் அனீதிகளை வெளியூர்களில் வசிக்கும் பார்வையற்றோர்கள் நினைத்தால் மட்டுமே சரி செய்யமுடியும். இதற்கு யாவரும் போராட்டத்துக்கு வந்து நமது சங்கத்துக்கு முன்னோர்கள் சேர்த்துவைத்த மாண்பினைக் கட்டிக் காத்திடவும் உறிமைகளை வென்றெடுக்கவும் வாரீர் வாரீர் என்று இருகரம் கூப்பி அழைக்கிறது நமது செயற்குழுவும் போராட்டக் குழுவும்.
பகலெல்லாம் பட்டினிக்கிடந்து, இரவுகளில் வெரும் வயிறு கலங்க பேருந்தில் கிளாம்பாக்கம் சென்று மீண்டும் சென்னைக்கு வந்து தங்களது போராட்டங்களை தொடங்கினார்கள் நம் உண்ணாவிரத வீரப்போராளிகள். நான்கு நாள் அலைக்கழிப்புகளுக்குப் பிரகே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்னால் நமது அலைக்கழிப்புகள் மிகச் சாதாரணமானது.
ஆகவே எதற்கும் துனிந்து வா எம் எழிச்சி மிக்க சமூகமே!
தங்கவும் இடம் தருகிறோம் தடைகள் தாண்டி வாருங்கள். அச்சம் தவிர் என்ற மாகவியின் சொல்லுக்கு இலக்கணமாய் எழுந்துவா எம் உடன்பிறப்பே!
இப்பொழுது இல்லை என்றால் இனி எப்பொழுதும் இல்லை!.
ஒரு சில நாள் தியாகம் பல நாள் நம்மை வாழவைக்கும்!
மாற்றுத்திறணாளி என்ற வார்த்தை மட்டுமே நம்மை மாற்றிவிடாது! வாழ்வில் ஏற்றம் காண போராட்டத் தேரை வடம் பிடிக்கவா, வாகை சூடவா! பார் போற்றும் எம் பார்வையற்ற சமூகமே!
வேலை கேட்டு வந்த நம்மை வீணர் என்று பிதற்றுகின்ற அவர்களுக்கு நம் ஒற்றுமையின் பலம் எத்தகையது என்று புரியவைக்கும் நேரமிது.
ஒருங்கிணைந்து போராட உறிமையுடன் அழைக்கிறோம் அணி திரண்டு வா எம் சமூக உடன் பிறப்பே!
மேலதிகத் தொடர்புக்கு: 7449158045, 7904751694.
பார்வையற்ற சமூகத்திற்கு பெரும் பழி வந்து சேர்ந்ததோ!
ஈரேழு வாரங்கள் இன்னுயிர் பனயம் வைத்து உண்ணாமல் இருப்பதைக் கண்டும் உணர்வேதும் வரவில்லையோ!
வாழையடி வாழையாய் ஏழையாக இருந்தாலும் ஏற்றம் கண்டவன் இங்கே கோழையாய் கூனி குறுகிப் போனானோ!
இரவென்றும் பாராமல் நம் பார்வையற்ற உறவுக் காய் வந்தேன் என்றவன் பகலையும் கண்டு நடுங்கும் பனைய கைதி ஆணானோ!
அரசிடம் கோரிக்கை வெல்ல இடி முரசென முழங்கியவன் மானமும் வீரமும் இழந்து தரிசென ஆனானோ!
காவலரின் மிரட்டலை வெற்றுக் கூவலாய் கருதி ஆவலுடன் மூத்தவருக்கு விடுதியில் இடம் தந்தவன் கடந்த காலத்தோடு மூழ்கித்தான் போனானோ!
நிலம் அதிர நிறைந்து நின்று ஐம்புலமதிற முழங்கியவன் போராட்டக் களம் காணும் முகம் இழந்து போனானோ!
கோரிக்கை வெல்லும் வரை எண்ணிக்கையில் குறையாமல் ஏராளம் வந்த வாடிக்கை கொண்டவன் வலுவிழந்து வெளவெளத்து போனானோ!
முதல்வரை பார்த்து நபர் முண்ணுறுக்கு வேலை பெற்றவன் அதிகாரிகளை பார்த்து அரண்டு போகும் அவல நிலைக்கு ஆணாநோ!
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை கட்டவிழ்ந்தால் புழுதி பறக்க போர்க்களம் கண்டு அட தீப்பிழம்பாய் சுடர்ந்தவன் சுரணை செத்துப் பொனானோ!
வீட்டிற்கும் விடுதிக்கும் என விரட்டும் காவலரை தோல் திமிரி எதிர்த்து மிரட்டும் குணம் கொண்டவன் துணிச்சலை சுருட்டி வைத்து ரத்தம் சுண்டித்தான் போனானோ!
போராட்டம் நடத்தும் நம் குழுவினர் பெரிதாய் யாரும் வரவில்லை என பரிதவித்து இருக்கையில் அன்றாடம் பட்டினியை பார்ப்பவன் கலப் பங்கேற்காமல் பலம் தாழ்ந்து பணிந்தானோ!
எட்டப்பரும் எல்லல் சித்தப்பரும் இனத்துவேசம் செய்தாலும் மனம் கோனா நிலை நின்று மதி வெற்றி கண்டவன் இங்கே சதி வலையில் விழுந்தானோ!
இன்று நம்மை முடக்குவான் நாளை மிச்சமின்றி ஒடுக்குவான் என தெரிந்தும் ஒதுங்கி ஓரம் செல்லும் அவமான மனதிறம் கொண்டானோ!
வீர சேனை என நின்று சீற்றம் உதிர்க்காமல் ஆனைவரும் வேளையில் அணிவகுத்து நிற்கலாம் என்னும் அவல எண்ணம் கொண்டவனாய் இந்த பாவி அந்தகனும் ஆனானோ!
குரல் பதிவில் கொக்கரிப்பு கூசாமல் கும்பலோடு எச்சரிப்பு என்னும் அசிங்க அரிதாரத்தை அலவற்று பூசியவன் ஆனானோ!
சாட வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல எம் பார்வையற்ற சமுதாயம் வெற்றி சூட வேண்டும் அதற்காக விரைந்து வர வேண்டும் என்பதற்காக வாடிய மனதுடன் வரிகளை திட்டி , இல்லை, இல்லை தீட்டிய,
இவன்,
முனைவர். உ. மகேந்திரன்.
பொதுக்குழு ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பு.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் நாளை 25: பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை. நடைபெறுவதாக இருந்த நமது சங்க பொதுக்குழுவானது, போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்பதனை உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
உறுப்பினர்கள் தேதி அறிவிக்கும் அறிவிப்பினை அழைப்பிதழாக எடுத்துக் கொண்டு நம்முடைய பொதுக்குழுவினை வெற்றிகரமாக நடத்தித் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
இச்செய்தியினை மிக விரைவாக செயற்குழு, உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது. ஆகையால் சங்கத்திற்கு உதவும் பொருட்டு உறுப்பினர்கள் பயணிக்கும் அனைத்து குழுக்களிலும் பகிர்ந்தும், உறுப்பினர்களுடைய நண்பர்களுக்கு தொலைபேசி வாயிலாக கூற வேண்டுமாய் சங்கம் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
நன்றி
இவன்.
பொதுச் செயலாளர்.
S. ரூபன் முத்து.B.A. B.Ed.
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் உரிமைகள் அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு
[சமநீதி, சம உரிமை, சமபங்கேற்புடன் பயணிக்கும் எமது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கமானது, கடந்த மூன்று வாரமாக ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிற கல்லூரி மாணவர்கள் மற்றும் பார்வையற்ற பட்டதாரி சங்கம் மேற்கொண்டு வரும், போராட்டத்தை ஆதரித்தும் கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் வருகிற 26 .2 .2024 அன்று திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை, எம் சங்க உறுப்பினர்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கும் திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராகவன் :9488017256 , கோகுல்:6374313181 ராமமூர்த்தி :7708276496 இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு கலம்கான படிக்கிற கல்லூரி மாணவர்கள் படித்து முடித்து வேலையில் இல்லா அன்பர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பேராதரவினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடக நண்பர்களே. இந்த சிறிய பதிவை படித்த பின் எங்கள் பக்கத்து நியாயத்தை நீங்களே கேள்விகளாக கேளுங்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு பணி வழங்கியுள்ளது. – முதல்வர் ஸ்டாலின்.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை – 4286 ,
அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் – 32,709,
நீதித்துறை – 5981,
பள்ளிக்கல்வித்துறை – 1847 ,
வருவாய்த் துறை – 2996 .
– தமிழ்நாடு அரசு தகவல்
பார்வையற்றவர்கள்:
ஒரு சதவீத இட ஒதுக்கீட்டின்படி 606 பார்வையற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டதா?
பட்டியல் எங்கே?
#JusticeForTNVisuallyChallenged #justice_for_VI
பார்வையற்ற சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களே! உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்க இதோ வருகிறது “I t wing for visually impaired.”
வணக்கம் நண்பர்களே!
நமது பார்வையற்ற சமூகத்தினரின் தேவைகளையும் நமக்கு ஏற்படும் சிக்கல்களையும் சமூக ஊடகங்களுக்குக் கொண்டுவர இதோ ஒரு புதிய முயற்சி!
இன்று நாம் தொழில் நுட்பங்களில் மிகவும் முன்னேறி இருக்கிரோம். நமது மக்கள் பலர் முக நூல் உள்ளிட்ட பல சமூக வலை தளங்களை பயன் படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அங்கும் இங்குமாய் சிதரிக் கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைத்து நமது சமூகப் பிரச்சனைகளை ஊடகங்களில் பிரபலப் படுத்த இதோ இந்த ஒருங்கிணைப்பில் இணைந்துகொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/FyWh73dCOifBDbSeSXpLMX
இந்த Whatsapp குழுவில் இணைந்து நம் சமூகத்தின் (I T Wing) தொழில்நுட்பக் குழுவாகச் செயல் படுவோம்.
இந்தக் குழு அனைத்து பார்வையற்ற சமூகத்தினருக்கும் பொதுவானது. Facebook, Youtube, Instagram, X, முதலான சமூக ஊடகங்களில் அனைத்தையுமோ, அல்லது சிலவற்றிலோ நீங்கள் பயனராக இருந்தால் மட்டுமே இந்தக் குழுவில் நீங்கள் பயணிக்க முடியும்.
அல்லது மேற்கூறிய தளங்களில் புதிய பயணராக இணைந்த பின் நீங்கள் இந்தக் குழுவில் இணைந்துகொள்ளலாம். மேற்கூரிய தளங்களைப் பயன்படுத்தாதவர்களுக்கு இந்த whatsapp குழுவில் பயணிக்க அனுமதி இல்லை.
ஆகவே உங்கள் இணைவுக்குப்பிரகு நீங்கள் எந்தெந்த வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதை நீங்கள் புலனக் குழுவில் தெரிவிக்கவேண்டும். மற்றவை குழுவில் விவரமாகத் தெரிவிக்கப்படும்.
ஆகவே வாருங்கள் பார்வையற்ற சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களே!
https://www.facebook.com/IndiaToday/videos/413944544621728/?mibextid=2Rb1fB
https://www.facebook.com/share/r/ukVfB7weUuED8r4Z/?mibextid=0VwfS7
Be the first to leave a comment