கவிதை: அன்னை

கவிதை: அன்னை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

உதிரத்தை ஒன்று திரட்டி,

பத்து  மாதம் அடைகாத்து,

பத்து  திங்கள் கருவறை என்ற

அன்பு சிம்மாசனத்தை இட்டு,

பக்குவமாய் இருந்து,

பாதுகாப்பாய்ப் பெற்றெடுத்த,

தாயம்மா நீ!

கண்ணுக்குள் பூட்டி,

நிலாவைக் காட்டி,

சிறுகை அளாவிக் கூழ் ஊட்டி,

கைபிடித்து நடைபழக்கி,

காத்துவந்த கன்னித் தமிழன்றோ நீ!

பண்படுத்தி, பழக்கம் சொல்லித் தந்து,

நற்றாயாய் வளர்த்திட்ட

நான்மறை வேதமம்மா நீ.

ஆசையாய் பூசைசெய்து,

திருப்பாதம் தொட்டு,

அனுதினமும் தொழுதிடுவேன்

தாயே உன் சேய் நானே.

ரத்தத்தைப் பாலாக்கி,

முத்தத்தைத் தேனாய் வார்த்து,

சத்தமில்லாமல் சாதனை புரியும்

சாமியும் நீதானே அம்மா!

கவி பல பக்கம்

என் கண்ணீர் காவியக் காரிகையே,

மந்திரத் தாரகையே,

உள்ளக் கோவிலில் வீற்றிருக்கும் வெற்றி நாயகி, அம்மா நீயன்றோ!

நடமாடும் தெய்வத்திற்கு

வணக்கமும், வாழ்த்தும்,

நன்றியும், பிரியாவிடையும்

சமர்ப்பணம்!

***ராமலட்சுமி

பகிர

1 thought on “கவிதை: அன்னை

  1. ராமலட்சுமி அவர்களின் படைப்பு சிறப்பு மென்மேலும் தங்கள் திறமை வளர்ச்சி பெற வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *