தொடர்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (3)

தொடர்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (3)

ஆக்கம் சிதம்பரம் இரவிச்சந்திரன் வெளியிடப்பட்டது

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

“வீட்டுக்கு வந்த அதிசய விருந்தாளி”

தேள்

“வெளிநாட்டுக்கு ஒரு பயணம் போய்விட்டுத் திரும்பிவரும்போது நம்மையும் அறியாமல் நமக்கும் தெரியாமல் நம்முடனேயே ஒரு விருந்தாளியும் வந்தால் எப்படியிருக்கும்? அதுவும் டிக்கெட் விசா கடவுச்சீட்டு ஒன்றும் இல்லாமல் அந்த விருந்தாளி நம்முடன் வந்தால்? கற்பனையான கதை என்று நினைத்துவிடாதீர்கள். உண்மையாக நடந்ததுதான் இது. ஆனால் இங்கே இல்லை. கனடாவில். வான்கூவர் நகரத்தில் இருந்த வீட்டில் தன்னுடைய சமையலறையில்  கெயில் ஹம்மத் என்ற கனடா பெண்மணி தரையில் ஒரு உயிரினத்தைப் பார்த்தார். முதலில் ஏதோ ஒரு தேளின் படம் என்று நினைத்துக் கொண்டார். அப்போது அந்த உயிரினம் ஓடி குளிர்சாதனப்பெட்டியின் அடியில் போய் ஒளிந்துகொண்டது. ஹம்மதும், அவருடைய பெண்ணும் சேர்ந்து சாமர்த்தியத்தோடு அதைப் பிடித்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் சில நாட்கள் அதைப் பத்திரமாக அப்படியே வீட்டில் அவர் வைத்துக்கொண்டிருந்தார்.

பிறகு டுவின்டி விலங்குக்காட்சி சாலைக்கு அதை அனுப்பிவைத்தார். அந்த உயிரினம் ஒரு பயங்கர நஞ்சுடைய ஒன்று என்று அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. கரீபியன் பகுதியில் காணப்படும் செட்டராஒப்டினஸ் ஜூன்சஸ் இனத்தைச் சேர்ந்த நச்சுத்தன்மை அதிகம் உடைய தேள் அது. இதை விலங்குகளுக்கான மருத்துவ நிபுணர் ஆன்டிரியான் வால்ட்டன் உறுதிப்படுத்தினார். கரீபியன் கடற்கரைப்பகுதியில் வாழும் தேள் கனடாவுக்கு எப்படி வந்தது? கனடாவுக்கும், கரீபியன் தீவுக்கூட்டங்களுக்கும் இடையில் ஏறத்தாழ 5,000 கி.மீ தூரம் உள்ளது. அப்படி என்றால் 5,000 கி.மீ தூரத்தில் இருந்து இந்த உயிரினம் எப்படி வான்கூவர் நகரத்தில் இருக்கும் ஒரு வீட்டின் சமையலறைக்கு வந்து சேர்ந்தது? இதைப் பற்றி யோசித்த போதுதான் ஒரு உண்மை வெளிப்பட்டது.  ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு ஹம்மத் க்யூபாவிற்குப் போய்விட்டு வந்த விஷயம் அவருக்கு ஞாபகம் வந்தது.  வீட்டுக்குத் திரும்பியபோது எடுத்துவந்த லக்கேஜுக்குள் நுழைந்து வந்திருக்கலாம் இந்தத் தேள் என்று அவர் கருதுகிறார்.  எப்படி வந்தாலும் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விக்டோரியா பெக் விலங்குக்காட்சிசாலையில் இப்போது இந்தத் தேள் சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது! தேள் கருவுற்றிருக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.  இந்த நச்சு அழகிக்கு ஒரு பெயரும் வைத்திருந்தால் நன்றாக இருக்குமே? எது எப்படி இருந்தாலும் வெளிநாட்டுக்குப் பயணம் போகிறவர்கள் திரும்பிவரும்போது லக்கேஜுக்குள் அபாயம் நிறைந்த எந்த உயிரினமும் புகுந்துவிடாமல் இருக்க கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்..”.

“உல்லாசக் கப்பலில் ஒரு சுகமான வேலை”

கப்பல்

“கடலில் அல்லது காயலில் நட்சத்திர பெருமை உடைய ஒரு சுகவாசக் கப்பலில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்? சுகவாசக் கப்பலில் வசிக்க வாய்ப்பும் அதற்காக சம்பளமும் கொடுக்கிறார்கள் என்றால் கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது. லன்டனில் ஒரு கம்பெனி தங்களுடைய ஆடம்பரமான உல்லாசக்கப்பல்களைப் பரிசோதிப்பதற்காக ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்திருக்கிறது.  ஹஷ் ஹஷ் லக்சுரியஸ் ஸ்டோர் அன்ட் கன்சேர்டு சர்வீஸ் என்ற இந்தக் கம்பெனி தங்களுடைய மின்னணு விளம்பர இணையதளத்தில் வெளியிட்ட ஆடம்பர உல்லாசக் கப்பல்களைப் பரிசோதிக்க ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தது.  சுயதொழில் முன்னேற்றம் என்ற அடிப்படையில் தான் ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். கம்பெனிக்கு அவசியம் நேரிடும்போது எல்லாம் சேவை செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் நிபந்தனை.

ஆடம்பரக் கப்பலில் ஒரு வாரம் தங்கி இருக்கலாம்.  இவ்வாறு வசிக்கும்போது ஒன்றுவிடாமல் கப்பல் வீட்டிற்குள் இருக்கும் எல்லா பிளாக் சாக்கெட்டுகள், வாசல்கள், படுக்கைகள், கழிப்பறை வசதிகள் என்று எல்லாமும் அழகாக செயல்படுகிறது என்பதை உறுதிசெய்வதோடு அவை உயர்தரமானவையாகவும் இருக்கிறது என்பதற்கு சான்று அளிக்கவேண்டும்.  எப்படி இருக்கிறது இந்த வேலை? இந்த வேலைக்கு கம்பெனி சம்பளமாக எவ்வளவு தருவதாக வாக்குறுதி கொடுத்தது தெரியுமா? 1300 டாலர்கள். இது மாதசம்பளம் இல்லை. ஒரே ஒரு உல்லாசக்கப்பலைப் பரிசோதிப்பதற்காகத் தரப்படும் சம்பளம். ஆண்டிற்கு இதைப் போல சுமாராக 50 உல்லாசக்கப்பல்களைப் பரிசோதிக்கவேண்டி இருக்கும் என்று கம்பெனி கூறுகிறது. அப்படி என்றால் வருடவருமானம் 65,000 டாலர்”.

“பள்ளி ஆண்டுமலரில் இப்படியும் ஒரு ஹீரோயின்”

நாய்

“ஸ்கூல் இயர் புக்கில் (ஸ்கூல் சார்பாக வெளியிடப்படும் வருடாந்திர மலரில்) நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் சேர்ந்து அமெரிக்கா ஆர்க்கின்சால் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் ஒரு நாயும் தன் முகத்தைக் காட்டியிருக்கிறது. அது ஒரு பெண் நாயின் முகம். இந்த நாய் சாதாரண ஒரு நாய் இல்லை. இது ஒரு போலீஸ் நாயும் கூட. டார்வின் என்ற இந்தப் பெண்நாய் ஸ்கூல் பாதுகாப்புப் படையில் ஒரு முக்கிய உறுப்பினர். ஸ்கூலில் மற்ற ஆசிரியர்களுக்கு சமமாக இந்த நாயின் படமும் ஆண்டுமலரில் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளது. ப்ரெயின் போலீஸ் முகநூல் பக்கத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கே9 ஸ்கூல் ரிசோர்ஸ் ஆபீசர் மியா டார்வின் என்று அச்சடிக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருக்கும் படம் முகநூல் பதிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் சின்னம் எது தெரியுமா? குளவி! அதனால் இந்தப் பள்ளிக்கூடம் ஆண்டுதோறும் வெளியிடும் ஆண்டுமலரின் பெயரும் ஹார்னெட் புக் என்பதுதான். எப்படி இருக்கிறது இந்தக் கதை?”.

“இப்படியும் ஒரு வண்ணத்துப்பூச்சி”

வண்ணத்துப்பூச்சி

“வண்ணத்துப்பூச்சிகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் தன் உடலில் அட்லஸ் அல்லது வரைபடத்தையே வரைந்து கொண்டு பாடிப் பறக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சி பற்றித் தெரியுமா? அதுதான் அட்லஸ் வண்ணத்துப்பூச்சி. இது கடல் மட்டத்தில் இருந்து 20 முதல் 1500 மீ வரை உயரம் உள்ள பசுமை மாறாக் காடுகள், இலையுதிர்க்காடுகளில் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இது map butterfly என்று அழைக்கப்படுகிறது. பெயரில் உள்ளது போலவே வெள்ளை நிற சிறகுகளைத் திறந்தால், ஒரு அட்லஸ் வரையப்பட்டது போல காட்சிதரும் இதன் உடலில் கருப்பு வரிகள், ஆரஞ்ச் அடையாளங்களைக் காணலாம். சிறகுகளின் அமைப்பு ஒரு திடமான வடிவத்தில் இல்லாமல் வெட்டி எடுத்தது போல இருக்கும்.  இதன் இறக்கைகளின் அளவு 50 முதல் 60 மி.மீ.  காடுகளில் உள்ள நீர் நிலைகள், ஈரத்தன்மையுடைய பாதைகளுக்கு அருகில் இவற்றைக் காணலாம்.

ஆண் இனத்தைச் சேர்ந்த தாவரங்களில்தான் இவை முட்டை இடுகின்றன.  முட்டை மஞ்சள் நிறத்திலும், புழு சிவப்பு கலந்த தவிட்டு நிறத்திலும் காணப்படுகிறது.  வண்ணத்துப்பூச்சியின் முழு வளர்ச்சி அடையாத புழுவின் தலையில் நீண்ட இரண்டு உணர்வு நீட்சிகள் காணப்படுகின்றன.  பியூப்பா பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.  இது விரிந்து வண்ணத்துப்பூச்சியாக மாற 10 முதல் 15 நாட்கள் ஆகின்றது.”

தொடர்புக்கு: nrvikram19@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *