Insert +r என்கிற தீர்வு

Insert +r என்கிற தீர்வு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மின் இணைப்போடு ஆதார் எண்: இணைப்பது எளிதுதான், ஆனால்… டெக்கிசன்

வணக்கம்!

மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சவால்முரசு பதிவைப் படித்தேன். நானும் கடந்தவாரம் இதை முயன்றேன். முழுப் பார்வையற்றவனான எனக்குப் பார்வையுள்ளவரின் உதவி தேவைப்படவில்லை. காரணம், பிரச்சனைக்குரிய அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அதாவது க்லிக்கபுல் என்று சொல்லும் இடத்திலோ, அல்லது அதனை ஒட்டிய வெற்றிடத்திலோ (blank space) கர்சரை வைத்துக்கொண்டு, insert+R கொடுத்தால், +க்லிக்கபுல் என்று ஒரு இடம் தோன்றி, அதை அப்படியே திரைவாசிப்பான் வாசித்துக் காட்டும். அந்த இடத்தில் நீங்கள் எண்டர் அழுத்தினால், கோப்பு தேடுவதற்கான பகுதி தோன்றும்.

இதனைப் பிறரின் உதவியின்றி நாமே செய்துவிடலாம். மேலும், அரசின் பல இணையதளங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

உதாரணமாக, www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் நாம் இதே insert+r முறையைப் பயன்படுத்தி, கேப்ச்சர்களைப் படிக்கலாம். ஆனால், அது எல்லா நேரங்களிலும் கைகொடுப்பதில்லை. தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in தளத்தில் நீங்கள் இந்த insert+r முறையைப் பயன்படுத்தினாலும் கேப்ச்சர்களைப் படிக்க முடியாது. இந்த தளம் குறித்தும் ஒரு பதிவு வந்தால் நன்றாய் இருக்கும்.

***கணேஷ்

விரல்மொழியர் வாட்ஸ் ஆப் குழு வழியாக.

***

இதுபோன்ற சிக்கல்களைக் கையாளும் வகையில், அரசு அக்சசபிலிட்டி டெஸ்டர் (Accessibility Tester) என்ற பணியிடங்களைத் தோற்றுவித்து, அவற்றில் பயிற்சி பெற்ற பார்வையற்றவர்களைப் பணியமர்த்தலாம்.

***பிரசாத் அருண்

விரல்மொழியர் வாட்ஸ் ஆப் குழு வழியாக.

***

வணக்கம் கணேஷ் மற்றும் அருண்!

உங்களின் மேலான ஆலோசனைகளுக்கு நன்றி. ஆனால், தொழில்நுட்பம் சார்ந்து எழுதுவதற்கு அது சார்ந்த பரிட்சயம் தேவைப்படுகிறது. அந்தப் பரிட்சயத்தின் வழியாகவே, அந்தக் கட்டுரைகளுக்கான தேர்ந்த மொழி கைவரப்பெறும்.

உங்களைப் போன்ற தொழில்நுட்ப ஆர்வலர்கள் அதை முயன்று பார்க்க வேண்டும். எல்லாப் பொருண்மைகளிலும் ஒற்றை நடை என்பது படிப்பவரை மட்டுமல்ல, எழுதுபவரையே சலிப்பூட்டி, தனக்கான தனிநடையையே கொலை செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறிவிடுகிறது.

ஆதலால், சில வரிகளேனும் எழுதவாருங்கள்.

மற்றபடி, பின்னூட்டத்தில் சொல்லியிருப்பவற்றை வாசகர்கள் முயன்று பார்த்து, அதையும் ஒரு பதிவாக எழுதலாம். நானும் முயன்று பார்க்கிறேன்.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *