பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இளநிலை, முதுநிலை (JDTB, SDTB) முடித்த பணிநாடுனர்களின் கவனத்திற்கு

பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இளநிலை, முதுநிலை (JDTB, SDTB) முடித்த பணிநாடுனர்களின் கவனத்திற்கு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

பல ஆண்டுகளாகவே, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்தே காணப்படுகிறது. மொத்தமுள்ள 83 இடைநிலை ஆசிரியர்ப் பணியிடங்களில் 24 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். அவர்களுள் பத்து பேர் துணைவிடுதிக்காப்பாளர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் கற்றல் கற்பித்தல் பணிகளில் திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை பள்ளிகள் அன்றாடம் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அதேசமயம், , பார்வைத்திறன் குறையுடையோருக்குக் கற்பிக்கும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டயம் (Junior and senior Diploma in Teaching the Blind JDTB and SDTB) முடித்துள்ள தகுதி வாய்ந்தவர்கள் தமிழக அரசின் ஆசிரியர்த் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் பணிநியமனம் பெற இயலாத திரிசங்கு சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்புக்கல்வியில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமானால், மேற்கண்டவர்களுக்கான ஆசிரியர்த் தகுதித் தேர்வு குறித்து மாநில அரசு ஒரு முடிவுக்கு வருவது அவசியமும் அவசரமுமான ஒன்று.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு,  எமது சங்கத்தின் சார்பில் துறை உயர் அதிகாரிகளிடம்  கடந்த 12/நவம்பர்/2021 அன்று, உத்தேச பணிமூப்புப் பட்டியல், புதிய பணிநியமனங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக மொத்த காலிப்பணியிட விவரங்கள் உள்ளடக்கிய  விரிவான தரவுகளைத் திரட்டி ஒரு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 25 பக்கங்கள் கொண்ட எமது அறிக்கையில், உடனடிப் பதவி உயர்வுகள், புதிய பணிநியமனங்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் எனப் பல பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இப்பொருண்மையில் துறையின் உயர் அதிகாரிகளிடம் உரையாடியும் வருகிறோம்.

அடுத்த கட்டமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்குப் பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையைக்  கொண்டுசெல்வதன் மூலம், இதற்கு சுமூகமான ஒரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் உளமார நம்புகிறோம். அதற்கு முதலில் சரியான தரவுகள் திரட்டப்பட வேண்டியது அவசியம்.

எனவே, பார்வைத்திறன் குறையுடையோரு்க்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றுவதற்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டயம் பெற்றவர்களின் துல்லியமான தகவல்களைத் திரட்டும் வகையில், ஒரு கூகுல் படிவத்தை வடிவமைத்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி, உரியவர்கள் அந்தப் படிவத்தை நிரப்பி, எமது முயற்சிக்குக் கைகொடுக்கலாம்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே படிவத்தை நிரப்பிட வேண்டும். இந்தப் படிவத்தை எதிர்வரும் 15/ஆகஸ்ட்/2022 மாலை 8 மணிக்குள் நிரப்பி அனுப்புமாறு தொடர்புடையவர்களை சங்கம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி.

படிவத்திற்கான இணைப்பு:

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *