அஞ்சலிகள்: ஐயா ரங்கராஜன்

அஞ்சலிகள்: ஐயா ரங்கராஜன்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ரங்கராஜன்
ரங்கராஜன்

பார்வையற்ற சமூகத்தின் மேன்மைக்காய் பாடுபட்ட முதுபெரும் போராளி ஐயா ரங்கராஜன் நேற்று 09/ஏப்ரல்/2022 காலை இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 71.

சிறந்த போராளி. தன் இறுதிமூச்சுவரை பார்வையற்றோர் சமூகத்தின் மேன்மைக்காய் உழைத்தவர்.

நடுவண் அரசு நிறுவனமாக கிண்டியில் இயங்கிய ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்சில் பணியாற்றியவர். மறைந்த மூத்தவரான ஐயா திரு. ஆசீர் நல்லதம்பி அவர்களுடன் இணைந்து தமிழகத்திலேயே பார்வையற்றோருக்கென்று பார்வையற்றோரால் தொடங்கப்பட்ட முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.

அன்னை தெரசா வெல்ஃபர் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வழியாக பார்வையற்ற வியாபாரிகள் அனேகரின் பசி போக்கும் பணி செய்தவர்.

ஸ்மைல் அறக்கட்டளையின் துணையுடன் கல்லூரி பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்களை வழங்கியவர்.

தென் இந்திய அளவில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற பெண்ணான திருமதி. ராதாபாய் அவர்களின் மூத்த சகோதரர். இறுதிமூச்சு வரை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் தன் ஆயுளை அர்ப்பணம் செய்தவர். அன்னாருக்கு சவால்முரசின் அஞ்சலிகள்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *