நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டு அறிக்கையினை மாண்புமிகு துணைமுதல்வரும் நிதியமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக இடம் பெற்ற அவரின் அறிக்கை அப்படியே இங்கே…

  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. * மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
  • மேலும் தொகுதி A மற்றும் B ஆகியவற்றில் 559 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • மேலும் சிறப்பு ஆட்சேர்ப்பு முகமை வாயிலாக 2020 21 ஆம் ஆண்டில் இதுவரையில் தனியார்த் துறையில் 848 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தேசிய நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப உதவிகளுடன் விரிவான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், மனவளர்ச்சிக் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், பலவகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகள் வழங்கப்படும்.
  • உடல் ஊனங்களை வரும் முன் காப்பதற்கும், அதனைக் கையாள்வதற்கும் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் செயல்படுத்தவும், மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காகவும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசால் 1700 கோடி மதிப்பில் ரைட்ஸ் (rights) என்ற சிறப்புத் திட்டம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட இடைக்கால மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

***

தொகுப்பு: சவால்முரசு ஆசிரியர்க்குழு

தொடர்புக்கு: mail@savaalmurasu.com

***

கடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு நிதி குறைப்பு, நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடுமையாக எதிர்க்கும் என்பிஆர்டி

நிதிநிலை அறிக்கை 2020 – 21: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கீடு எவ்வளவு

பகிர

2 thoughts on “நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *