Categories
வகைப்படுத்தப்படாதது

தேடலுக்கும் தீர்வுக்கும் தெரிந்துகொண்ட அரங்கம்

கரோனா ஊரடங்கு காரணமாக, பெருநிறுவனங்களின் குளிர் அறைக் கூடுகைகளையும் கடந்து, சாமானியனின் ஒற்றை அறைக்குள்ளும் ஒளிர்மிகு அரங்கைக் கட்டமைத்த பெருமை ஜூம் தொழில்நுட்பத்தையே சாரும். வாடகைக்கு மண்டபம் பிடித்து, வருவோருக்கு மத்திய உணவு வழங்கி, கவனிக்க அவசியமான உரைகளின் இடையேயும் காஃபி டீ பரிமாறி, எல்லாவற்றிற்கும் எவரெஸ்டாய் பங்கேற்றோருக்கான பயணப்படியெல்லாம் பட்டுவாடா செய்வதற்குள், ஸ்ஸப்ப்ப்பா. இனி அதற்கெல்லாம் வேலை இல்லை. நூறுபேர் உட்காரும், இல்லை படுத்திருக்கும் இல்லை இல்லை அவரவர் வேலையைச் செய்துகொண்டே இங்கேயும் தன் அவதானிப்பைக் […]

Categories
இதழிலிருந்து உதவிகள்

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” நெஞ்சம் நெகிழ்த்திய நினைவுகள் 2020

2020 புத்தகத்தைத்திருப்பினேன்.
மகிழ்ச்சியைத் தந்த வெற்றிகள், சில மரணங்களின் கொடையாய் வேதனைகள், நம்பிக்கை ஊட்டிய சாதனைகள், நடுநடுவே பல சருக்கல்கள்.

Categories
அறிவிப்புகள் செய்தி உலா

ஞானத்தகப்பன் புகழ் போற்ற, நாம் எடுக்கும் விழா

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:

சிறப்பு விருந்தினர்

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் அறிவிப்புகள் உதவிகள் செய்தி உலா

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்

Categories
அரசியல் இதழிலிருந்து உரிமை கோரிக்கைகள் செய்தி உலா

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை?

மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Categories
இதழிலிருந்து

கடந்துபோகும் 2020 ஆண்டு, கடகடனு ஒரு ரிவைண்டு

வருஷம் முழுக்க அரசுக்கும் நமக்கும் வாய்க்கால் வரப்புத் தகராறுதான்ணே. ஸ்டேட்டாவது கொஞ்சம் கேட்டுக்குள்ள நின்னாங்க. என்ன வேணும்? ஏது தேவைனு கேட்கவாவது செஞ்சாங்க. இந்த செண்ட்ரலு நம்ம கண்ட்ரோல்லையே இல்ல. ஜெயரஞ்சன், சித்தரஞ்சன், இது என்னடா திவ்யாஞ்சன் புதுப்பேருன்னு பார்த்தா, தெய்வாம்சம் கொண்டவுங்கனு அர்த்தமாம். சரியான மனோரஞ்சன்தான் போங்க. அட மனோரஞ்சன்னா ஹிந்தில டைம் பாஸ்னு அர்த்தம்ணே. “ஏம் மா இந்த காக்லியர் ஆப்ரேஷனுக்கு 5%, அதுக்கு யூஸ் பண்ணுற மெஷினுக்கெல்லாம் 12 18% ஜிஎஸ்டி போட்டா […]

Categories
இதழிலிருந்து இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 கலை குற்றம் சினிமா தொடர்

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 4: Dogani (Silenced) (கொரியத் திரைப்படம்.

இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Categories
இதழிலிருந்து கல்வி

துண்டு துண்டாய் திருத்தங்கள், துண்டாடப்படுகிறதா ஊனமுற்றோருக்கான கல்வி?

எந்த கல்விக்கொள்கை அருகாமைப் பள்ளிகளை அகற்றிவிடத் துடிக்கிறதோ, எந்தக் கல்விக் கொள்கையால் சிறப்புக் கல்வி என்ற வார்த்தையே வஞ்சிக்கப்பட்டிருக்கிறதோ அதே கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஊனமுற்றோருக்கான கல்வியையும் வணிகமயமாக்கத் துடிக்கிறது நடுவண் அரசு.

Categories
செய்தி உலா வகைப்படுத்தப்படாதது

மண்டல மையங்களை மூடும் “முடிவைக் கைவிட வேண்டும்” நடுவண் அரசுக்கு என்பிஆர்டி எச்சரிக்கை

டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள்  1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் […]

Categories
வகைப்படுத்தப்படாதது

உதவித்தொகை பட்டுவாடா – அரசு வங்கிகளுக்கு பதில் தனியார் வங்கியா? புதிய திட்டத்தை கைவிடக் கோரி முதல்வருக்கு டாராடாக் கடிதம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் சமூகப்பாதுகாப்பு மாத உதவித்தொகையை, அரசுடைமை வங்கிகளுக்கு பதில் தபால்துறை அலுவலகங்களை பயன்படுத்தும் தனியார் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த முயற்சியினைக் கைவிட வேண்டும் எனவும் முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை 2012 ஆம் ஆண்டு முதல் அரசுடைமை வங்கிகளில் தமிழக அரசு பணம் செலுத்தி, தனியார் சேவை முகவர்கள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு […]