பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார். “தம்பி தமிழ்வாணா! அருப்புக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?” “ஏன் சார் என்ன விஷயம்?” “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”. “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?” “அட எனக்கில்லப்பா. ரோசி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? மரியா ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ அருப்புக்கோட்டைல […]
