எவரும் எவரோடும் விரைவாகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இந்த நூற்றாண்டின் இணைய வசதி சாத்தியமாக்கியிருக்கிறது. ஏற்போ, எதிர்ப்போ தனிமனிதன் தன்னுடைய தரப்பை முன்வைத்து உரையாடும் களமாக மாறிவிட்டது இணையம். ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியமான சமத்துவச் சிந்தனைகள் மேலும் கூர்கொள்ளத் தொடங்கியிருப்பது இணையத்தால்தான். வாக்கு வங்கியாகக்கூட மாற இயலாத, ஆண்டாண்டுகளாய் ஆள்வோரின் பார்வையே பட்டிராத சமூகத்தின் விளிம்புநிலை அலகுகளிலிருந்தும்கூட நீதிக்கான இறைஞ்சல்கள் மேலெழுவதும், அவைப் பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டி, தட்டிக்கழிக்கவே இயலாத நிர்பந்தத்துக்குள் அதிகாரத்தைத் தள்ளுவதுமான நிகழ்வுகள் […]
