விதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள்.
விதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகளுக்கு: https://thodugai.in
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் படைப்புகளுக்கு https://thodugai.in
20 ஜூலை, 2020 நவீன்குமார் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கல்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது தோணுகால் கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் சரவணபாண்டி நாகரத்தினம் தம்பதியின் மூத்தமகனான நவின்குமார், ஏழு மாதக் குழந்தையாகப் பிறந்தார். இதன் காரணமாக, வலது கால் மற்றும் வலது கை செயலிழந்ததோடு, பேச்சுத்திறனிலும் பாதிப்பு ஏற்பட்டது. தனது […]
17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் […]
16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு […]
-தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 92 விழுக்காடு மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை 4816 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்டு, அவர்களுள் 4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, 617 மாணவர்கள் தேர்விவ் பங்கேற்று, 599 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம், அவர்களின் தேர்ச்சி விழுக்காடு 97.08 ஆக உள்ளது. சென்னையில் […]
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அரசு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படும் புனிதவெள்ளி நாளான இன்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். கடந்த மார்ச் […]