Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து இரங்கல்

திரு. அ.கு. மிட்டல் அவர்களின் சோக மரணம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு. கவுல் அவர்களின் இரங்கல் அறிக்கை

அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.

1. சிறப்பை நோக்கிய செயல்கள்

2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.

Categories
association letters bus pass helenkeller association

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுக!

7 செப்டம்பர், 2020 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், மாற்றுத்திறனாளிகள் உள் மாவட்டத்திற்குள் சென்றுவர பயன்படுத்தும் இலவச பயணச்சலுகை அட்டையை (bus pass) புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு அட்டை புதுப்பிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அட்டையை 31.ஆகஸ்ட் 2020 வரை புதுப்பிக்காமலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்என போக்குவரத்துத் துறை அறிவித்தது. இந்த நிலையில்,அந்தக் காலக்கெடு முடிவடைந்ததால், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகள்  அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
AICFB cinema important programs PTFB seminar

ஐந்தாவது கருத்தரங்கிற்கு அழைக்கிறது பேரவை

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம்இன்று (16 August-2020,  நியாயிரு) காலை 11 மணிக்கு!இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல். ZOOM இணைப்பு:https://us02web.zoom.us/j/84865754775Meeting ID: 848 6575 4775வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் ஐந்தாவது மாதாந்திர […]

Categories
AICFB seminar

ஜூம் வழி கருத்தரங்கு: பார்வையின்மையும் மரபுவழி காரணிகளும்

05 ஆகஸ்ட், 2020 மரபணு ஆலோசனை என்றால் என்ன? மரபுவழி தோன்றும் பார்வை குறைபாட்டினை தடுக்க இயலுமா? எவ்வகை உறவுமுறை திருமணங்கள் பார்வை பாதிப்பை ஏற்படுத்துகின்றன? பார்வை குறைபாடு உடையவர்களும், உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களும் மேற்கொள்ளவேண்டிய மரபணு பரிசோதனைகள் எவை? பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் இதர காரணிகள் எவை? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள  வாருங்கள் ஜூம் அரங்கிற்கு.  அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind)  மரபணு […]

Categories
ATM சட்டம் banking common voice disabled news rights

வங்கி மேலாளர்களே! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?

31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]

Categories
AICFB association statements differently abled news important programs seminar

திரைவாசிப்பான்கள் பயன்படுத்தி, சமூக ஊடகங்களைக் கையாள்வது எப்படி?” அறிந்துகொள்ள ஒரு பயிலரங்கு அனைவரும் வாருங்கள்!

24 ஜூலை, 2020 அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) இணைய வெளி கருத்தரங்கம் குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பார்வையற்றோரின் உரிமைக் குரலை உடனுக்குடன் ஒலிக்கச் செய்ய இயலுமா? பார்வையற்றோரின் திறமைகளை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற முடியுமா? இதுபோன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள  24.07.2020 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணி அளவில் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால் “திரைவாசிப்பான் மூலம் சமூக ஊடகங்களை […]

Categories
agitation association statements banking differently abled news

“பார்வையற்றோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது சட்டவிரோதம்” வங்கி மேலாளரின் அராஜகப் பேச்சு, போராட்டம் நடத்தப்போவதாக டாராடாக் அறிவிப்பு

19 ஜூலை, 2020 அஷோக்பாலா என்கிற ஐயப்பன் திருவாரூர் மாவட்டம் திருத்தரைப்பூண்டி வட்டம் பாண்டிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்பாலா என்கிற ஐயப்பன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தான் கணக்கு வைத்திருக்கும் திருத்தரைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தன்னைப் பிற வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகத் திட்டியதோடு, பார்வையற்றவர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதே சட்டப்படி தவறு” என கண்டபடி பேசியதாக ஒரு வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, தொடர்புடைய வங்கி மேலாளரின் […]

Categories
association letters association statements court csgab differently abled department differently abled news Govt. policies affected differently abled PTFB seminar

நன்றிகளும் வாழ்த்துகளும்

9 ஜூலை, 2020 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு. கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, […]

Categories
agitation court csgab differently abled news Govt. policies affected differently abled news about association seminar

திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே. “எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான […]

Categories
சட்டம் law

சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு

31 ஜூலை, 2020 ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாட்கள் கடந்த பின்னும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு, மத்திய மாநில அரசுகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக, தற்போது தமிழக அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதனை வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். தெளுங்கானா உயர்நீதிமன்றமோ, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக […]