செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சிலர் சமையல் தொடர்பான பட்டயப் படிப்பில் முதல் முறையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் இந்தச் சாதனை அவர்களுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக ஆணையர் அலுவலக உயர் அதிகாரிகளைச் சந்தித்தபோது பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிவதுபோல செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் செவித்திறன் குறையுடைய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். செவித்திறன் குறையுடைய பள்ளிகளில் விடுதிப் பணியாளர்களாகவும், […]
Category: செய்தி உலா
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தலைப்பு: பார்வையற்றோரின் பொருளாதார சுதந்திரம்:
நாள்: இன்று (25/ஜூலை/2021),
நேரம்: காலை 11 மணி,
நிகழ்விற்கான இணைப்பு: https://www.clubhouse.com/event/mylEY4yV
எதிர்காலங்களில் அரசால் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள், சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் என அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முன்பாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை மிக முக்கியமானது.
ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
கரோனா நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விளிம்புநிலை மக்களான ஊனமுற்றோர், திருநங்கைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான துயர் துடைப்பதையே தங்களின் முதன்மையான செயலாகக்கொண்டு களம்புக வேண்டியது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் கடமை.
மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பிற்கு சுமார் 1.1/2 மணி நேரம் செலவழித்து, எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.
