கல்வி நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தளங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த 2005ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
Category: செய்தி உலா
குஷ்புவின் கருத்திற்கு உங்கள் எதிர்வினை என்ன?
தேர்தல் அறிக்கை என்பது, பல்வேறு விடயங்களில் தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள், தங்களின் எதிர்கால திட்டமிடல்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லும் சாசனமாகக் கட்சிகள் கருதுகின்றன. ஆளும் மற்றும் ஆளத் துடிக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்று வாக்குறுதிகளாகவே மக்கள் கருதுவார்கள்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், தங்கள் பள்ளிக்கல்வியையே தாமதமாகத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்ப் பயிற்சி முடித்துப் பட்டதாரி அல்லது முதுகலை ஆசிரியர் தகுதி பெறுவதற்குள் வயது 30ஐஎட்டிவிடுகிறார்கள்.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை
ஆழ்ந்த இரங்கல்கள்
துடிப்பும் தோரனையுமாய், அவர் நடமாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன.
அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.
1. சிறப்பை நோக்கிய செயல்கள்
2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.
7 செப்டம்பர், 2020 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், மாற்றுத்திறனாளிகள் உள் மாவட்டத்திற்குள் சென்றுவர பயன்படுத்தும் இலவச பயணச்சலுகை அட்டையை (bus pass) புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு அட்டை புதுப்பிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அட்டையை 31.ஆகஸ்ட் 2020 வரை புதுப்பிக்காமலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்என போக்குவரத்துத் துறை அறிவித்தது. இந்த நிலையில்,அந்தக் காலக்கெடு முடிவடைந்ததால், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகள் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. […]
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம்இன்று (16 August-2020, நியாயிரு) காலை 11 மணிக்கு!இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல். ZOOM இணைப்பு:https://us02web.zoom.us/j/84865754775Meeting ID: 848 6575 4775வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் ஐந்தாவது மாதாந்திர […]
