வென்றது கோரிக்கை.
வென்றது கோரிக்கை.
19 ஜூலை, 2020 அஷோக்பாலா என்கிற ஐயப்பன் திருவாரூர் மாவட்டம் திருத்தரைப்பூண்டி வட்டம் பாண்டிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்பாலா என்கிற ஐயப்பன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தான் கணக்கு வைத்திருக்கும் திருத்தரைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தன்னைப் பிற வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகத் திட்டியதோடு, பார்வையற்றவர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதே சட்டப்படி தவறு” என கண்டபடி பேசியதாக ஒரு வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, தொடர்புடைய வங்கி மேலாளரின் […]
7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே. “எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான […]
கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / – வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை […]
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 – வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து […]
கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் […]
“மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஐ முறையாக அமல்படுத்திட, சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோட்டை முற்றுகைப் போராட்டம் தலைமைச்செயலரின் சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 29.ஆகஸ்ட்.2019 அன்று நடைபெற்ற போராட்டமும் அதற்குப் பிறகான கைது நடவடிக்கைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு […]