8 செப்டம்பர், 2020 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் ம. சிவக்குமார் (38).(அலைபேசி :8220745473) இவர் PhD முனைவர் பட்டம் பெற்று தற்போது கரூர் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக தற்காலிகப் பணியில் உள்ளார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு திருமணமான தங்கையும் உள்ளனர். முனைவர் சிவக்குமார், இவரது அண்ணன், தங்கை என இவரது குடும்பத்தில் மொத்தம் உள்ள மூன்று பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் மூவருமே […]
Category: differently abled news
2 [செப்டம்பர், 2020 Meeting link:https://us02web.zoom.us/j/88507507045Meeting ID: 885 0750 7045 நேரம்: மாலை 5.45 மணி. யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public இன்று: செப்டம்பர் 2 2020புதன்கிழமை: பங்கேற்கும் பள்ளிகள்: 1. இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முன்னால் மாணவர்கள் மட்டும். 2. T.E.L.C. பார்வையற்றோர் பள்ளி திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) முன்னால் மாணவர்கள் மட்டும். 3. செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி பரவை. முன்னால் மாணவர்கள் மட்டும். 4. C.S.I. பார்வையற்றோர் பள்ளி அயர்னியபுரம் முன்னால் […]
24 ஜூலை, 2020 அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) இணைய வெளி கருத்தரங்கம் குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பார்வையற்றோரின் உரிமைக் குரலை உடனுக்குடன் ஒலிக்கச் செய்ய இயலுமா? பார்வையற்றோரின் திறமைகளை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற முடியுமா? இதுபோன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள 24.07.2020 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணி அளவில் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால் “திரைவாசிப்பான் மூலம் சமூக ஊடகங்களை […]
20 ஜூலை, 2020 நவீன்குமார் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கல்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது தோணுகால் கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் சரவணபாண்டி நாகரத்தினம் தம்பதியின் மூத்தமகனான நவின்குமார், ஏழு மாதக் குழந்தையாகப் பிறந்தார். இதன் காரணமாக, வலது கால் மற்றும் வலது கை செயலிழந்ததோடு, பேச்சுத்திறனிலும் பாதிப்பு ஏற்பட்டது. தனது […]
19 ஜூலை, 2020 அஷோக்பாலா என்கிற ஐயப்பன் திருவாரூர் மாவட்டம் திருத்தரைப்பூண்டி வட்டம் பாண்டிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்பாலா என்கிற ஐயப்பன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தான் கணக்கு வைத்திருக்கும் திருத்தரைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தன்னைப் பிற வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகத் திட்டியதோடு, பார்வையற்றவர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதே சட்டப்படி தவறு” என கண்டபடி பேசியதாக ஒரு வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, தொடர்புடைய வங்கி மேலாளரின் […]
19 ஜூலை, 2020 தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்.Zoom இணைப்பு:https://us02web.zoom.us/j/83738267875Meeting ID: 837 3826 7875 வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் “தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்” என்ற பொருண்மையில் எதிர்வரும் 19 […]
16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு […]
11 ஜூலை, 2020 அன்புடையீர்! பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியரின் 25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வெற்றி விழாக் கொண்டாட்டம் நாளை 12-07-2020 ஙாயிற்றுக்கிழமை அன்று சூம் (Zoom) அரங்கில் நடைபெற உள்ளது. அரங்கமுகவரி: https://us02web.zoom.us/j/89029942706 Meeting ID: 890 2994 2706 இதழுக்குப் பங்காற்றிய சேவையாளர்களின் வாழ்த்துரைகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் களைகட்டவிருக்கின்றன. உங்கள் அனைவரையும் வரவேற்க அன்போடு காத்திருக்கிறோம். நன்றி. இங்ஙனம் ஆசிரியர் குழு விரல்மொழியர் மின்னிதழ் http://www.viralmozhiyar.com […]
10 ஜூலை, 2020 கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயது மாற்றுத்திறனாளி தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டதால், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 1000 நிவாரணத்தைப் பெறமுடியாமல் தவித்து வந்திருக்கிறார். தனக்குப் புதிய அடையாள அட்டை வழங்கும்படி வட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, மாரியப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கிராம நிர்வாக […]
9 ஜூலை, 2020 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு. கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, […]
