அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
Category: braille
ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.
31 ஜூலை, 2020 பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் […]
30 ஜூன், 2020 அன்றிலிருந்து இன்றுவரை மக்களிடம் அருகிவிடாமல் தொடர்வது காலையில் தினசரிகள் படிப்பது என்கிற பழக்கம். ஆனால், அதுவும் நம் தலைமுறையோடு முடிந்து போகுமோ என்ற கவலையும் இல்லாமல் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், எங்கள் வீட்டிற்கு காலை ஏழு மணிக்குள் தினமலரோ, தினகரனோ காலத்திற்கேற்ப தினசரிகள் மாறியிருக்கலாம் தினம் வருவது நிற்கவில்லை. அப்பாவும் அம்மாவும் பக்கங்கள் திருப்பிப் படிக்கிற சத்தம் என்னை என்னவோ செய்யும். முழு செய்தித்தாளையும் ஒன்றுவிடாமல் புறட்டிப்பார்க்கிற எனது பசிக்கு […]
