திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
Category: வகைப்படுத்தப்படாதது
தமிழக அரசால் நேற்று 21 ஐஏஎஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள், சமூகப் பாதுகாப்புத்துறையின் ஆணையராகப் பணியாற்றிவரும் திரு. R. லால்வீனா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு. விஜயராஜ்குமார் ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் தொடங்கியாயிற்று. விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்பது எழுதப்பட்டிருக்கும் விதி அவ்வளவுதான். தேர்வு,எதிர்காலம் குறித்த கவலைகளில் பெற்றோர்கள் துணிந்துவிட்டார்கள். முடங்கிக் கிடத்தல் தந்துவிட்ட சளிப்புக்கும் தனிமைக்கும் ஆறுதலாய் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கின்றன பல கொடுத்துவைத்த செல்லங்கள். ஆனால், இங்கே எதற்கும் எப்போதும் பொறுப்பேற்க முன்வராத பல அதிகார பீடங்களால், தங்களின் நிலை என்னவென்றே அறியாமல் எப்போதும் குழப்பமும் திகைப்புமாய் இல்லப்பட்டிகளில் ஒரு எல்லைவரை வருவதும், எட்டிப் பார்த்துத் […]
• வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும்
கரோனா ஊரடங்கு காரணமாக, பெருநிறுவனங்களின் குளிர் அறைக் கூடுகைகளையும் கடந்து, சாமானியனின் ஒற்றை அறைக்குள்ளும் ஒளிர்மிகு அரங்கைக் கட்டமைத்த பெருமை ஜூம் தொழில்நுட்பத்தையே சாரும். வாடகைக்கு மண்டபம் பிடித்து, வருவோருக்கு மத்திய உணவு வழங்கி, கவனிக்க அவசியமான உரைகளின் இடையேயும் காஃபி டீ பரிமாறி, எல்லாவற்றிற்கும் எவரெஸ்டாய் பங்கேற்றோருக்கான பயணப்படியெல்லாம் பட்டுவாடா செய்வதற்குள், ஸ்ஸப்ப்ப்பா. இனி அதற்கெல்லாம் வேலை இல்லை. நூறுபேர் உட்காரும், இல்லை படுத்திருக்கும் இல்லை இல்லை அவரவர் வேலையைச் செய்துகொண்டே இங்கேயும் தன் அவதானிப்பைக் […]
டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள் 1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் […]
மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் சமூகப்பாதுகாப்பு மாத உதவித்தொகையை, அரசுடைமை வங்கிகளுக்கு பதில் தபால்துறை அலுவலகங்களை பயன்படுத்தும் தனியார் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த முயற்சியினைக் கைவிட வேண்டும் எனவும் முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை 2012 ஆம் ஆண்டு முதல் அரசுடைமை வங்கிகளில் தமிழக அரசு பணம் செலுத்தி, தனியார் சேவை முகவர்கள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு […]
”எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்.”பேராவூரணி அருகே, பெற்றோர் இல்லாத நிலையில் வாழ வழியில்லாமல், பார்வைக் குறைபாடுடைய சிறுமி தனது அண்ணனுடன் தவித்து வருவது குறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது அந்தச் சிறுமிக்கு சிகிச்சையும் பார்வையும் கிடைத்திருப்பதுடன், பல்வேறு உதவிகளும் கிடைத்து வருவதாக சிறுமியின் தரப்பில் நெகிழ்ச்சியுடன் […]
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுவுடன் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு எம்.எல்.ஏ சரவணன் சிகிச்சையளித்து உதவினார். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிப் பெண் சசிகலா. தனக்கு உதவி கோரி எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்தது. கணவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி இருதய பிரச்சினை உள்ள குழந்தையுடன் கஷ்டப்படும் சசிகலா, தனக்கும் தன் குழந்தைக்கும் உதவி வேண்டும் என திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணனிடம் மனு […]
