180 இடங்கள் என்ற திமுகவின் எதிர்பார்ப்பை மக்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள் என்றாலும், மக்கள் தந்திருக்கும் இந்த தீர்ப்பு பல்வேறு நிறங்கள் கொண்ட கட்சிகள், அவற்றின் குரல்கள் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது ஜனநாயக விழுமியங்கள் பண்படுவதற்குப் பெரிதும் உதவும்.
Category: தமிழகத் தேர்தல் 2021
ஜனநாயகத் திருவிழா
எப்போ தேர்தல் தேதின்னு சுவாரசியமா எதிர்பார்த்துக் காத்திருக்க, பிப்பரவரி 26 விரும்பாத நாள் அன்னைக்கு தேர்தல அறிவிச்சு ஆல் ப்லைண்ட் சொசைட்டியை அப்செட் ஆக்கிடுச்சு ஆணையம்.
தேர்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து வாக்களிக்கும் வண்ணம், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கான வாகனச் செலவை ரூ. 200 வரை ஆணையம் ஏற்கும் என்ற அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம், குறிப்பாக பார்வையற்றோரிடம் வரவேற்பைப் பெற்றது.
அன்பு்ள மாற்றுத்திறனாளி தோழமைகளே!
எதிர்வரும் 6 ஏப்ரல் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைத் தவறாது ஆற்றிட அன்புடன் வேண்டுகிறது சவால்முரசு. அத்துடன், தங்களது வாக்கு செலுத்திய அனுபவங்களை நீங்கள் விரும்பினால் எங்களுடன் பகிரலாம். வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களின் அணுகுமுறைகள், நீங்கள் வாக்குச் செலுத்திய அந்தப் பெருமிதத் தருணம் என ஏப்ரல் ஆறு செவ்வாய்க்கிழமை உங்கள் கள அனுபவம் எதுவாகினும் சொல்லுங்களேன்.
நீங்கள் பகிர விரும்பும் உங்கள் அனுபவத்தை, சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்திலோ, அல்லது, 9789533964 என்ற எண்ணிலோ, குரல்ப்பதிவு அல்லது எழுத்து வடிவிலோ வழங்கலாம்.
மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர், mail@savaalmurasu.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.
ஏப்ரல் 6 காலை 7 மணி முதல், அன்று இரவு 10 மணி வரை.
அனைவரும் அறிய, அனுபவம் பகிர்வோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களைப் பொருட்படுத்தாமல் ஆளும் அதிமுக அரசு பாராமுகமாக இருந்தது என்கிற ஆழமான கோபம் பலரிடம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற வைத்த கட்சி திமுக என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் அதே அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று அவர் மட்டும் அல்ல, அனைவருமே நம்பினோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16 ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
