2020 – 21 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, துணைமுதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34181 கோடியும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 15000 கோடியும் 2020 – 21 ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும் பார்க்க: தமிழக பட்ஜெட் 2019 – 20: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அறிவிப்புகள் எவை? மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்த ஆண்டின் வரவு செலவுத் […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
நன்றி BBC Tamil கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதால் கவனிக்க ஆளின்றி 16 வயதாகும் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யான் செங் சிறு வயது முதலே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தையும் சகோதரரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, புதன்கிழமையன்று, அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த மரணத்தைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் ஹுவாஜியாஹே நகர மேயர் […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளைப் பொருத்தவரை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடங்கள் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரெயில், சைகைமொழி உள்ளிட்ட பிரத்யேக முறைகளோடு பொருத்திக் கற்பிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைக்கல்வியில், வழக்கமான பாடங்களில் பெறும் முன்னேற்றம் மட்டுமின்றி, அந்தப் பிரத்யேக முறைகளில் குழந்தைகள் பெறும் அடைவுகளைச் சோதிப்பது, அவற்றை குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பிப்பது போன்றவை இன்றியமையாத கற்பித்தல் செயல்பாடுகளாகும். இத்தகைய […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் படம் காப்புரிமை getty images நேற்று (பிப்ரவரி 1) நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 9500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தனியாள் வருமானவரி தொடர்பாகப் புதிய வருமானவரித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 500000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமானவரியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம், பழைய வருமானவரித்திட்டத்தில் வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்த […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான காக்லியர் இம்ப்லான்ட் (cochlear implant) அறுவைசிகிச்சைக்கு ஜிஎஸ்டியில் ஐந்து விழுக்காடு வரியும், அதன் உபகரணங்களுக்கு 12 மற்றும் 18 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் முன்னால் தலைவரான திரு. ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், நாட்டில் 1.26 மில்லியன் பேர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் பெரும்பாலோர்வறுமைப்பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகவே, இந்த அறுவைசிகிச்சைக்குவிதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்மு.யுவராஜ் சென்னைஆணை பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உதவித் தொகை கிடைக்காததால் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். 40 சதவீதம் ஊனம் அடைந்த மாற்றுத்திறனாளி களுக்கு வருவாய் துறை மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற குடும்ப அட்டை, ஆதார், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம் […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பிராஞ்ஜல் பாட்டில் பதவியேற்றுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்ஜல் பாட்டில்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி […]
அக்டோபர் 15 உலக வெண்கோல் தினம்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் பார்வையற்றோர் பயணத்தின் வழிகாட்டி; பள்ளம் மேடுகள் உரைக்கிற உற்ற தோழன் அன்பார்ந்த பொதுமக்களே, சக பயணிகளே! நீங்கள் பயணிக்கிற சாலைகளில் வெண்கோல் பிடித்த பார்வையற்றவரை எதிர்கொண்டால், கண்டும் காணாததுபோல் அமைதியாகக் கடந்துவிடாமல், அவரை அணுகி, அவர் சாலை கடக்க உதவுங்கள். இவ்வாறு செய்வதில் எந்தவிதத் தயக்கமோ, கூச்சமோ, அச்சமோ கொள்ளாமல் அதனைத் தன்னைப் போன்ற சக மனிதருக்கு ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதுங்கள். பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்த.சத்தியசீலன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தானமாக வழங்கிய நிலத்தில் மனைவி தனபாக்கியத்துடன், ஆசிரியர் ஆர்.ஆறுமுகம். படம்: ஜெ.மனோகரன்கோவை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லம் கட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர். கோவையை அடுத்த அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிரி யர் ஆர்.ஆறுமுகம். இவர் டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரா கப் […]
