Categories
Uncategorized upsc

வெற்றிக்களம்: யூபிஎஸ்சி 2025 தேர்வு முடிவுகள்: 42 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

மொத்தம் பத்து பார்வைத்திறன் குறையுடைய தேர்வர்கள் வெற்றி.

upsc logo

படம் காப்புரிமை: விக்கிப்பீடியா

இந்தியக் குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 6, 2025) அன்று வெளியிடப்பட்டன.

சுமார் 1087 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 42 மாற்றுத்திறனாளிகள் உட்பட 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக UPSC அறிவித்துள்ளது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள தனது பத்திரிக்கை செய்தியில், தங்கள் நிறுவனத்தில் பயின்ற திரு. அஜய் ராஜ் மற்றும் செல்வி. ஜெசிலா ஜன்னத் ஆகிய இருவரும், அகில இந்திய அளவில் முறையே 109 மற்றும் 397 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளதாகவும், இந்த இருவருமே பார்வைத்திறன் குறையுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அகில இந்திய அளவில் 10 பார்வைத்திறன் குறையுடைய  தேர்வர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அஜய் ராஜ்

அஜய் ராஜ், படம் காப்புரிமை:

timelinedaily.com

மாற்றுத்திறனாளிகளின் வகைமை வாரி ஒதுக்கீடு பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் படிக்கவும்.

PwBD CategoryDescriptionTotal Selected
PwBD-1Blindness and Low Vision10
PwBD-2Deaf and Hard of Hearing14
PwBD-3Locomotor Disability09
PwBD-5Multiple Disabilities09
Total42

வகுப்பு வாரியான மாற்றுத்திறனாளி வெற்றியாளர்கள் பற்றி அறிய கீழே உள்ள பட்டியலைப் படிக்கவும்.

CategoryPwBD-1PwBD-2PwBD-3PwBD-5Total PwBD
General0709060628
EWSNil01Nil0102
OBC0304030111
SCNilNilNil0101
STNilNilNilNil00
Total1014090942

கோழிக்கோடு தொட்டில்பலம் என்ற சிற்றூரைச் சேர்ந்த அஜய் ராஜ், ஓர் ஆங்கிலப் பேராசிரியர். டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயின்ற இவர், கடந்த 2024 யூபிஎஸ்சி தேர்வில் 730-ஆவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜெசிலா ஜன்னத்

ஜெசிலா ஜன்னத், படம் காப்புரிமை:

metrovartha.com

கல்லிக்கோட்டை வடகராவைச் சேர்ந்த 30 வயது ஜெசிலா ஜன்னத்தின் 4-ஆவது முயற்சிக்குக் கிடைத்திருக்கிறது இந்த வெற்றி. இவர் மும்பையிலுள்ள டாட்டா இன்ஸிடியூட் ஆஃப் சோஷியல் சைன்ஸ்-ல் (TIS) சமூகவியல் பயின்றுள்ளார்.

வெற்றி பெற்ற அனைவருக்குமே தொடுகையின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***சகா


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.