Categories
அறிவிப்புகள் Uncategorized

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முக்கிய அறிவிப்பு

விண்ணப்பிக்க இறுதிநாள்: டிசம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை.

அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளிப் பணிநாடுனர்களே!

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நடைபெறவிருக்கிற டிஎன்பிஎஸ்சி தொகுதி IV தேர்வை எழுதவிருக்கிறீர்களா? அப்படியானால், எமது பயிற்சி மையத்தால் நடத்தப்படவிருக்கிற தொடர் இணையவழிப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுப் பயன்பெறலாமே!

அறிவிப்பை உள்ளடக்கிய புகைப்படம்

பயிலும் முறை:     இணையவழி (Zoom) வகுப்புகள்;

அனுமதிக்கப்படும் முதல்கட்டப் பயிற்சியாளர்களின் எண்ணிக்கை:      100.

பயிற்சி காலம்:     2025  ஜனவரி தொடங்கி, ஆறு அல்லது ஏழு மாதங்கள்.

கற்பித்தல் செயல்பாடுகள்:     இணையவழியில் ஒருங்கிணைக்கப்படும் பாடம்சார் வகுப்புகள், இணையவழிக் குழுக் கலந்துரையாடல், இணையவழியில் நடத்தப்படும் வாராந்திர மாதிரித்தேர்வுகள், கற்றலுக்குத் தேவையான பாடம்சார் குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் அடங்கிய ஒலி மற்றும் மின்புத்தகங்கள் (audiobooks and e-books).

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:    முழுப் பார்வையற்றவர்கள் (Visually Impaired) மற்றும் குறைப்பார்வையுடையவர்கள் (Low-vision).

விண்ணப்பிக்கும் முறை:     அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி, கூகுல் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

கூகுல் படிவத்தை நிரப்புவதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 9789533964 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

விண்ணப்பிக்க இறுதிநாள்:     டிசம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை.

குறிப்பு: பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திரத் தேர்வுகளில் தளராத ஊக்கத்துடன் பங்கேற்றுத் தேர்வுக்குத் தன்னை முழு அளவில் தயார்படுத்திக்கொள்ளும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதால், பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பது எமது மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரின் இறுதி முடிவுக்கு உட்பட்டது.

ஆன்சலிவன் மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV தேர்வு தொடர்பான பயிற்சிக்கு விண்ணப்பிக்க:

https://forms.gle/pdH572GC8NgUpBVs5

கூகுல் படிவத்தை நிரப்பும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் என்ன?

இந்தக் காணொளியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முக்கிய அறிவிப்பு”

இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த பயன் உள்ளதாக அமைகிறது.

Like

Leave a reply to K.yasodha Cancel reply