ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும்
‘என்ன படிக்கலாம்?’
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்வைக்குறையுடைய மாணவர்களுக்கான
உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கு
நாள்: ஏப்ரல் 29, 2024 திங்கள்கிழமை முதல்,
மே 4 2024 சனிக்கிழமை வரை.
ஒவ்வொரு நாளும் மாலை ஏழு மணிக்கு.

மீட்டிங் இணைப்பு:
https://us06web.zoom.us/j/88439735353?pwd=cvaRwftBLOvQZYEWrpdD3x0Zwl80Iv.1
மீட்டிங் குறியீடு:
884 3973 5353
கடவுக்குறி:
121212
யூட்டூப் நேரலை:
அன்புள்ள மாணவர்களே!
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தாயிற்று. தேர்வு முடிவுகளும் எதிர்வரும் மே மாதம், ஆறாம் நாள் வெளியாகிவிடும். ஆனால்,மேற்கொண்டு என்னபடிப்பது?
எதிர்கால நலனுக்காக எந்த படிப்பைத் தெரிவு செய்வது?
இப்படி உங்கள் மூளைக்குள் குழப்பங்கள் கும்மியடிக்கத் தொடங்கியிருக்கின்றனவா?
அப்பா அம்மாவும் அடுத்து என்ன என்ன என்னவென்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்களா?
கவலையை விடுங்கள். அடுத்த வாரம் 29ஏப்ரல், 2024 திங்கள்கிழமை முதல்,
4 மே, 2024 சனிக்கிழமை வரை,
ஒவ்வொரு நாளும் மாலை ஏழு மணிக்கு ஆன்சலிவன் ஜூம் அரங்கில்,
டீச்சிங், மியூசிக், லா, பேங்க்கிங், டிஎன்பிஎஸ்சி/யூபிஎஸ்சி/எஸெஸ்சி, ஐடி மற்றும்ஸ்காலர்ஷிப்ஸ் என
பல்வேறு துறை வல்லுநர்கள் உங்கள் வினாக்களுக்குப் பதில் வழங்குகிறார்கள்.
பிறகென்ன? உட்கார்ந்த இடத்திலேயே உங்கள் ஸ்மார்ட்போனில் சூம் ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.
மேலே கொடுத்திருக்கிற இணைப்பைச் சொடுக்கி உங்கள் அப்பா அம்மாவோடு நிகழ்ச்சியில் பங்கெடுங்கள்.
இது வெறும் கேள்விபதில் நிகழ்ச்சி மட்டுமன்று;
உங்களுக்கான அந்த வல்லுநர்களின் வழிகாட்டல் என்றைக்குமாய் அமைய,
நீங்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம்செய்துகொள்ளக் கிடைத்திருக்கிற ஓர் அற்புத வாய்ப்பு.
உங்கள் பார்வைக்குறையுடைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள். நிகழ்ச்சிக்கு அவர்களையும் அழைத்துவாருங்கள்.
ஐயங்கள் களைந்து,
குறிக்கோல்களைக் கட்டமைக்க;
அனைவரும் வாருங்கள்!
இவள்,
U. சித்ரா,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.
குறிப்பு: ஒவ்வொரு நாளும் இடம்பெறும் துறைகள் குறித்த அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ் பக்கத்தில் வெளியாகும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் தொடுகை யூட்டூப் வழியே நேரலை செய்யப்படும்.
நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை அறிய:
நிகழ்ச்சியின் நேரலைக்கு:
http://www.youtube.com/@thodugai
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “‘என்ன படிக்கலாம்?”
Good initiative.
LikeLike