குரு படம்” என நான் தொடங்கினால், “மணிரத்தினம்” என்று முந்தும் நண்பர்களிடம் “ஆருயிரே! ஆருயிரே! மன்னிப்பாயா” என்றுதான் பாட வேண்டும். ஏனென்றால் நான் சொல்லும் குரு கமலின் குரு. 1980 அல்லது 81, நடிகர் முத்துராமன் சிறு வேடத்தில் தோன்ற, கதை: வாணி கமலகாசன் என்று தலைப்பில் போட்டிருந்தது. சிற்றறிவில் சிக்கிய பொதுஅறிவு.
“பேரைச் சொல்லவா! அது நியாயமாகுமா?”
சிலருக்கு ஜானகியின் குரல் மூளைக்குள் ரீங்கரித்திருக்கலாம். துள்ளிக் குதிக்கும் ஒரு பாடல் அதே படத்தில் இடம்பெற்றிருந்ததாலோ என்னவோ, எனக்கோ எப்போதுமே “பேரைச் சொல்லவா” மிகவும் அலுப்பூட்டும் பாடல்தான். முழுவதும் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், அந்தப் பாடலிலும் ராஜாவின், எஸ்பிபியின், ஜானகியின் ரம்ய மந்திரங்கள் வேலை செ்ய்யும் சில இடங்கள் உண்டு.
“நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்;
நான் பார்த்தது அழகின் ஆலயம்;
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்”.
சரி, விஷயத்தைவிட்டு எங்கெங்கோ பறந்துகொண்டிருக்கிறேன் நான். ஆனால், பறக்காமல் இருக்க முடியுமா?
பாடலைக் கேட்டால். அந்தப் பாடலுக்கு இப்போது என்ன அவசியம் குரு என்றா கேட்கிறீர்கள். பறந்தகதை சொல்லத் தோன்றியபோது, மனதுக்குள் சிறகுவிரித்த முதல்ப்பாடல் இதுதான்.

பள்ளி வயது காலங்களில், “நான்தான் எங்க க்லாஸிலேயே ஃபர்ஸ்ட் ராங்” என்று கொஞ்சம் பெருமை பீற்றிக்கொண்டாலே, வீட்டுப் பெருசுகள், அக்கம்பக்க ஆயாக்களுக்குப் பொறுக்காது. அவர்கள் தங்கள் மனதுக்குள் வியப்பென்று விதந்தோதிய சில தகவல்களைப் பொது அறிவுத் துணுக்குகளாகத் தேக்கிவைத்திருப்பார்கள். அவற்றிலிருந்து பிய்்த்தெடுத்து சில வினாக்களை நம் முன் வீசுவார்கள். பெரும்பாலும் கண்டுபிடிப்புகள், கண்டுபிடித்தவர்கள். அமெரிக்காவை, மின்சாரத்தை, ரேடியோவை, கடைசியாக ஆகாய விமானத்தை.
“ஏதோ ஒரு ஊர்தி வானத்திலிருந்து இறங்கி வந்தது. அதிலிருந்து ஒரு ஆண்மகன் இறங்கினான். கொன்றை மரத்தடியில் நின்றிருந்த அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அந்த ஊர்தி மீண்டும் வான் ஏகிவிட்டது.” சேரன் செங்குட்டுவனிடம் மலைவாழ் மக்கள் சொன்ன கதை. சிலம்பின் இந்த ஊற்றுமுகக் காட்சியை எனது இரண்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் கதை நாடகமாகப் படித்திருக்கிறேன். “இரண்டாம் வகுப்பிலேயா!” என்று 2கே கிட்ஸ் ஆச்சரியமாகக் கேட்கலாம். தமிழோ, ஆங்கிலமோ, அன்றைய மொழிப் பாடப்புத்தகங்கள் மிக சுவாரசியமாக, கற்பனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. பெய்யும் மழையை ஒரு பார்வையற்றவன் மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அழ. வல்லியப்பாவின் ‘வானத்திலே திருவிழா’ பாடல் ஒன்று போதுமே.
‘வானவூர்தி’ என்று முதன்முதலில் அந்தக் கதை நாடகத்தில் நான் தொட்டுப் படித்த சொல், பிரெயில் புள்ளி வடிவங்களோடே இப்போது என் மனதில் மின்னி நிறைகிறது. தவிர, ஒன்றாம் வகுப்பு கோடை விடுமுறையில், மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு என்னைக் கூட்டிப்போன மாமா, அங்கு வாங்கித் தந்த சிறு ஹெலிகாப்டர், அதன் வழவழப்பான ப்லாஸ்டிக், அதன் இடுப்புச் சாவியை முறுக்கியவுடன் காற்றைக் கிழித்துக்கொண்ட்உ வட்டமிடும் முதுகுப்புற இறக்கை, மீனைப் போன்ற உடலமைப்பு கொண்ட அதனை, கிளியைப்போல நான் என் டிரௌசருக்குள் பொத்திப் பொத்திப் பாதுகாத்த அந்த நாட்கள் என நினைவுகளின் இறக்கைகள் முளைக்க முளைக்க, நான் எங்கெங்கோ பறந்து திரிகிறேன்.
மற்றபடி ‘வானவூர்தி, ஆகாய விமானம்’ அப்படி எங்கும் எப்போதும் சொல்லித் திரிந்ததாக நினைவில் இல்லை. எங்கள் சொல் ஏரோப்பிலேன் தான். “ஹேய் அங்கே பாரு ஃப்லைட், பாரு பாரு கிட்டத்துல இருக்குல்ல, சக குழந்தைகள் அண்ணாந்து பார்த்து, கைதட்டி ஆர்ப்பரிக்க, நான் அப்படியே நின்றிருப்பேன். ஒரு சொல், சிறு சத்தம் அவ்வளவுதான் எனக்கும் ஏரோப்பிலேனுக்குமான உறவு.
மழையில்லாத நாட்களிலும் சிறு இடியோசை போல, அவ்வப்போது எங்கள் ஓட்டுக்கூரைக்கு மேல் அந்த சத்தத்தைக் கேட்பதுண்டு. வாங்கித் தந்த பொம்மை பிலேன்களோடு அந்தச் சொல்லைப் பொருத்திப் பார்த்துக்கொண்டதில் எனக்குள்ளேயே ஏரோப்பிலேன் பற்றி ஒரு கருத்துருவாக்கம் தொடங்கி வளர்ந்துவிட்டது. பிறகு செய்திகளில், திரைப்படங்களில் ஏரோப்பிலேன் பற்றிக் கேள்விப்படவும் அதன் சத்தங்களைக் கேட்கவும் தொடங்கினேன்.
“கொட்டும் முழக்கங்கள், கல்யாண மேளங்கள், கொண்டாட்டம் கேட்டதம்மா!
ஆசை விமானத்தில், ஆனந்த வேகத்தில் சீர்கொண்டு வந்ததம்மா!” கொஞ்சம் காற்றும் விசிலும் கலந்துவரும் விமானச் சத்தத்தை அன்று அந்தத் திரைப்பாடல் வழி கேட்டிருந்தேன். இன்றோ, புதுவீடுகள் பெருகப் பெருக, தெருதோறும் டைல்ஸ் பதிக்கும் பணியின்போது மிகச் சாதாரணமாக அந்தச் சத்தங்களைக் கேட்கமுடிகிறது. இனிமையா என்றால் இல்லை எரிச்சலாய். ஆனால், பிலேன் சத்தங்களும் சரி, அதுபற்றிய கதைகளும் சம்பவங்களும் எப்போதுமே இனிமையானவை, சுவாரசியம் கூட்டுபவை.
“அந்த ஃப்லைட் கொஞ்சம் ரிப்பைர்னு யார் சொல்லியும் கேட்கல. எங்க அம்மாவே பிரைம் மினிஸ்டர், எனக்கே அட்வைசா அப்படினு சொல்லிக்கிட்டேசஞ்சை காந்திஃப்லைட்டை ஓட்டுனாரு.
ஆக்சிடண்ட் ஆயிடுச்சு இறந்துட்டாரு”.
ஆறாம் வகுப்பில்
எங்கள் உடற்கல்வி ஆசிரியர் புஷ்பநாதன்
சொன்ன கதையில் என் மனதில் ஒரு ஃப்லைட் விழுந்து நொறுங்கக் கண்டேன்.
“சேதுபதி! எங்களுக்கு ஒரு ஃப்லைட் வேணும், அதுல உன் மனைவி எங்ககூட வரணும். நாங்க ஒரு இடத்தில அவள இறக்கிவிட்டுடுவோம்” கேப்டனுக்குத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுக்கும் சேதுபதி ஐபிஎஸ் படத்தின் அந்தக் காட்சிகளில் என் கற்பனையில் ஒரு பிலேன் வந்து நின்றிருந்தது. போதாதற்கு
தன் திரைப்படங்களில் பிலேன் இறக்கையைப் பிடித்துக்கொண்டே சண்டை போடுவார் என்று கேள்விப்பட்டபோது, இறக்கைகளைப் பிடித்தபடி, அந்த விமானத்தைப் போலவே, பறந்துகொண்டிருக்கும் அவரின் கால்களும் பாதங்களும் என் கற்பனையில் நிழலாடும். அந்தக் காட்சியைக் கொஞ்சமேனும் நிறைவ்ஏற்றிக்கொள்ளும் ஆசையோ, எதுவோ, பள்ளி மைதானத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ராட்டினத்தில் உட்காராமல், ராட்டினம் தொங்குவதற்குக் காரணமான அதன் மேல்ப்பகுதியில் அமைந்த வட்ட வடிவக் கம்பியைப் பிடித்துக்கொண்டு, ராட்டினம் மிக வேகமாகச் சுற்றச் சுற்றப் பறந்து பரவசம் அடைந்திருக்கிறேன்.
அது 1999 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் என்றே நினைவு. காட்மாண்டுவிலிருந்து டெல்லிக்குப் பரந்த
தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டு வாரங்கள் அந்தச் செய்திதான் இந்தியாவையே ஆட்டிப்படைத்தது. விமானத்துக்குள் சிக்கியிருந்த 171 பயணிகளில் எழுவர் தமிழர். வேலூரைச் சேர்ந்தவர்கள். நல்லவேலை பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் அப்போது அறிமுகமாகியிருக்கவில்லை.

பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நான் அந்தச் செய்திகளை உண்ணிப்பாகக் கவனித்து வந்தேன். விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை ரூபின் கட்டியால் கொலை செய்யப்பட்டார். இறுதியில், தீவிரவாதிகளின் கோரிக்கைகளுக்கு பணிவதைத் தவிர அரசுக்கும் வேறு வழியில்லை என்றானது. இந்தச் சம்பவத்தை மையக்கருவாகக்கொண்டு, ராதாமோகன் இயக்கிய
திரைப்படமும் வெளியானது.
பாரதிய ஜனதா கட்சிக்காகத் தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவிருந்த நடிகை சவுந்தரியா
சிக்கி இறந்தார் என்ற செய்தி தமிழக மக்களை அந்தச் சிந்தாமணிக்காகக் கண்ணீர்விட வைத்தது. ஆட்சியில் இருந்தபோதே விமான
அன்றைய ஆந்திர முதல்வர் திரு. ராஜசேகர ரெட்டிக்காக இங்கே தமிழகத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், ஒருநாள் துக்கம் அனுசரித்து விடுமுறையும் அறிவித்தார்.
இப்படி விமானம் பற்றியோ, விமான விபத்துகள் குறித்தோ நான் கேள்விப்படும்போதெல்லாம் நான் சிறுவயதில் தொட்டுச் சுகித்த அந்த ஹெலிகாப்டரை பிரமாண்டமாக உருவகித்துக்கொண்டே அந்தச் செய்திகளை உள்வாங்குவது என என் மூளையும் பழகிவிட்டிருந்தது.
நான் பணியாற்றிய புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி மாணவர்களை எப்படியாவது விமானத்தில் ஏற்றிக்காட்டிவிட வேண்டும் என என் மனைவி, அன்றைய நிலையில் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திருமதி. விசித்ரா கடும் பிரயத்தனங்கள் செய்தார். காலம் புரள, அதிகாரம் கைமாற்றப்பட, கனவு பலிக்கவில்லை என்றாலும், அது இடம் மாறி நிறைவேறியது.
ஆம்! கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 3, அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடிய தமிழக அரசு, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, செவித்திறன் குறையுடைய மாணவர்களை சேலத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தது. எல்லோரும் பாராட்டிய இந்த நிகழ்வு குறித்து, நண்பர் அரங்கராஜா உள்ளிட்ட சில பார்வையற்றவர்களிடம் வேறு மாதிரியான கருத்துகள் இருந்தன.
வெறும் சத்தத்தால் மட்டுமே விமானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற ஒரு பார்வையற்ற குழந்தைக்கு இதே விமானப்பயணம் சொல்லில் அடங்காத மகிழ்ச்சியையும் பூரிப்பையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்தக் கருத்துகளில் பொதிந்திருந்த உள்ளார்ந்த உண்மைக்கு நியாயம் சேர்க்கும் வண்ணம், கடந்த 2023 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்தின்போது, திருச்சியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சில மாணவிகள் சென்னைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அந்த மாணவிகளின் பயண அனுபவத்தை அவர்களிடமே கேட்டுப் பதிவு செய்யும் திட்டமும் எனக்குள் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், கதையும் கதாப்பாத்திரமும் எனதே எனதாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
அரிய வாய்ப்பு, எழுத்தாளர் கூட்டம், தொலைதூர அழைப்பு என்பதையெல்லாம் தாண்டி, உண்மையில்
பங்கேற்கும்படி என்னை உந்தித் தள்ளிய முதல் விடயமே, எனக்கும் என் உடன் வரும் ஒரு உதவியாளருக்கும் சென்றுவரும் விமானப் பயணத்துக்கான மொத்தத் தொகையையும் அவர்களே தந்துவிடுவார்கள் என்பதுதான். மகன் நேயன் பொருட்டு, மனைவி வர மறுத்துவிட்டார். மகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டாள். ஆனாலும், இன்னும் அவள் அப்பரண்டிஸ்தான் என்பதால், துணையாய் வர தங்கை மோனிஷாவை அழைத்தேன்.

மோனிஷா சித்ராக்காவின் அக்காள் மகள். பார்வையற்றவர்களுக்கான மிகத் தேர்ந்த வழிகாட்டி. நமது சொற்களின் வழியே நம் அகத்தைத் துல்லியமாக அறிந்துகொள்ளும் மூளையும் மனமும் வாய்க்கப்பெற்றவர் அல்லது அப்படிப் பயிற்றுவிக்கப்பட்டவர்.
உதவியாள் என்ற பெயரில் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செய்யவோ, உங்கள் பொருட்டு அவரிடம் தொடர்புகொள்ளும் பொதுமக்களிடம் உங்கள் அனுமதியில்லாமலேயே முந்திக்கொண்டு பதிலளித்து, உங்கள் தன்முனைப்பைச் சீண்டவோ அவர் ஒருபோதும் முயலமாட்டார். இடுங்கலான வழிகளோ, ஏறுக்குமாறான பாதைகளோ, எவையாயினும், நீங்களே உங்களை ஒரு சுமை என்று எண்ணும்படி அவரின் பற்றுதல் இராது. மொத்தத்தில், பார்வைப்புளமின்மையால் உண்டாகிவிட்ட இயல்பான இடைவெளிகளை இட்டு நிரப்பும் உயிருள்ள உணர்வுள்ள உங்களின் மற்றொரு கண், மனம், மூளை அதுதான் மோனிஷா.
பறப்போம்.
***ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.



3 replies on “அனுபவம்: பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (1)”
[…] […]
LikeLike
[…] […]
LikeLike
For applications in corrosive environments, Elite Pipe Factory offers titanium pipes that provide unmatched strength and resistance. These pipes are ideal for industries requiring superior performance under harsh conditions. Our dedication to quality makes Elite Pipe Factory a leading choice in Iraq for titanium pipes. Discover more about our products at elitepipeiraq.com.
LikeLike