பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு.

CSGAB போராட்டக்களம்: நாள் பதினாறு

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் 

16 ஆம் நாள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்ட அறிவிப்பும் அழைப்பும்:

நாள்: 27/02/2024. நேரம் காலை 10 மணி. மாற்றுத் திறணாளிகள் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்!

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க உறவுகளே!

உங்கள் அனைவருக்கும் வீரத்துடன் கூடிய போராட்ட வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

ஆளும் வர்க்கத்தின் கைவிரிப்புகளால் நாம் ஓய்ந்துவிடக்கூடாது என்ற உத்வேகத்தில் இன்று ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகர் பகுதியில் நடத்தப்பட்ட சாலை மரியல் நம் உறுப்பினர்களின் பேராதரவுடன் போராட்டக்களம் கண்டது. அதற்கு காரணம் இன்றைய நமது பலம். நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வெளியூர்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்து கலந்துகொண்டார்கள். எனினும் இன்னமும் பலர் வந்து கலந்துகொண்டால் நம் போராட்டம் வீரியம் பெறுவதோடு அரசின் கவணத்தை ஈர்க்கும். காலையில் கைதாகி மாலையில் மீண்டு நம் இடம் சேர்ந்த பின் இன்றைய போராட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுத்துவிட்டோம் என்று நிரைவடைந்து விடுகிறோம். ஆனால்

காயப்பட்ட பார்வையற்றோருக்கு மனக்குமுரல்கள், உண்ணா விரதம் இருப்பவர்க்கோ உயிர் வேதனை! தாக்கப்பட்ட பெண்களுக்கோ மன உளைச்சல் என்று நம் சகோதர சகோதரிகளின் போராட்ட பாதிப்பு சொல்லி முடியாது. இதற்கெல்லாம் மருந்து நம்மிடம் இருக்கும் போராட்ட குணம் மட்டுமே!

 நண்பர்களே! கருவரையில் தொடங்கும் நமது போராட்டம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிப்புகளுக்காகத் தொடர்ந்தது. பேருந்து பயணச்சீட்டுகளுக்காகவும் போராடினோம்! இன்னும் வேலைவாய்ப்புகள், உள்ளிட்ட வாழ்வுறிமைகளுக்காகவும் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்! எல்லாவற்றையும் நமது சங்கம்தான் முன் நின்று நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறது. 

இப்போது நமது வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பினையும் மையப்படுத்தி கடந்த 14 நாட்களாக நடைபெறுகின்ற அறப்போராட்டத் தேரானது இது வரையிலும் மாணவர்களின் பேராதரவோடு சீறிய முறையிலும், உற்சாக எழிச்சியுடனும் வடம் பிடிக்கப்பட்டு தற்போது வீதியில் நிற்கிறது. பார்வையற்றோருக்கு மட்டும் அரிவிக்கப்படாத 144 தடை விதிக்கப்பட்டது போல நடந்துகொள்கிறது காவல் துறை. மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் இல்லை. அதனால் வீட்டுக்கு போகவேண்டிய அவலம். இந்த நிலையில் வெளியூர்களில் இருக்கும் பணி நாடுனர்கள் நினைத்தால் மட்டுமே இந்த போராட்டத்தினை வென்றெடுக்கவியலும். கூட்டம் குரையக்குரைய ஊடகங்களின் ஆதரவும் குரையத் தொடங்குகிறது. கூடிய மட்டும் போராடுவார்கள், முடியாத போது அவர்களே கலைந்துவிடுவார்கள் என்று காவலர்கள் அவர்களுக்குள்ளேயே கேலி பேசுகின்ற அவலங்களும் தற்போது அரங்கேறுகின்றன. 

நமக்குள் இருக்கும் சில சமூக விரோதிகள் எனும் கருப்பாடுகளின் உதவியோடு முன்னணிப் போராளிகளின் வீடுகளைக் கண்டறியும் காவலர்கள், வீடுகளுக்குச்சென்று வீட்டு உறிமையாளர்களை மிரட்டி வரும் கொடுமைகள். என சென்னையில் வசிக்கும் பார்வையற்றோர்களுக்கு இந்த காவல் துறையும் அரசும் செய்யும் அனீதிகளை வெளியூர்களில் வசிக்கும் பார்வையற்றோர்கள் நினைத்தால் மட்டுமே சரி செய்யமுடியும். இதற்கு யாவரும் தங்கள் அடையாள அட்டைகளுடன் போராட்டத்துக்கு வந்து நமது சங்கத்துக்கு முன்னோர்கள் சேர்த்துவைத்த மாண்பினைக் கட்டிக் காத்திடவும் உறிமைகளை வென்றெடுக்கவும் வாரீர் வாரீர் என்று இருகரம் கூப்பி அழைக்கிறது நமது செயற்குழுவும் போராட்டக் குழுவும். 

பகலெல்லாம் பட்டினிக்கிடந்து, இரவுகளில் வெரும் வயிறு கலங்க பேருந்தில் கிளாம்பாக்கம் சென்று மீண்டும் சென்னைக்கு வந்து தங்களது போராட்டங்களை தொடங்கினார்கள் நம் உண்ணாவிரத வீரப்போராளிகள். நான்கு நாள் அலைக்கழிப்புகளுக்குப் பிரகே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்னால் நமது அலைக்கழிப்புகள் மிகச் சாதாரணமானது. 

ஆகவே எதற்கும் துனிந்து வா எம் எழிச்சி மிக்க சமூகமே!

தங்கவும் இடம் தருகிறோம் தடைகள் தாண்டி வாருங்கள். அச்சம் தவிர் என்ற மாகவியின் சொல்லுக்கு இலக்கணமாய் எழுந்துவா எம் உடன்பிறப்பே!

இப்பொழுது இல்லை என்றால் இனி எப்பொழுதும் இல்லை!.

ஒரு சில நாள் தியாகம் பல நாள் நம்மை வாழவைக்கும்!

மாற்றுத்திறணாளி என்ற வார்த்தை மட்டுமே நம்மை மாற்றிவிடாது! வாழ்வில் ஏற்றம் காண போராட்டத் தேரை வடம் பிடிக்கவா, வாகை சூடவா! பார் போற்றும் எம் பார்வையற்ற சமூகமே! 

வேலை கேட்டு வந்த நம்மை வீணர் என்று பிதற்றுகின்ற அவர்களுக்கு நம் ஒற்றுமையின் பலம் எத்தகையது என்று புரியவைக்கும் நேரமிது.

ஒருங்கிணைந்து போராட உறிமையுடன் அழைக்கிறோம் அணி திரண்டு அடையாள அட்டையுடன் வா எம் சமூக உடன் பிறப்பே!

மேலதிகத் தொடர்புக்கு: 7449158045, 7904751694.

செய்தி வெளியீடு எண்: 389 

செய்தி வெளியீடு 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 

நாள்: 27.02.2024 

பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் 12.02.2024 முதல் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு, உதவித்தொகை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்களிடம் 17.02.2024 மற்றும் 21.02.2024 ஆகிய நாட்களில் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் திரு. எஸ். நாகராஜன், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி. எம். லக்ஷ்மி, இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திருமதி. பி. ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப, பள்ளி கல்வி துறை இயக்குநர் முனைவர் ஜி. அறிவொளி மற்றும் இதர உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். 
சங்கத்தின் சார்பில், அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனைத்து துறைகளிலும் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்தல், ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், SLET மற்றும் NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவி பேராசிரியர் பணியிடம் வழங்குதல், மாணவர்களுக்கான கல்லூரி கல்வி கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளித்தல், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குதல், அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படி உயர்த்தி வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
இப்பேச்சுவார்த்தையினை 
தொடர்ந்து 
அரசு 
இராயப்பேட்டை மருத்துவமனையில் உண்ணாவிரதமிருந்த 4 சங்க உறுப்பினர்களை மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் அவர்கள் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் அரசால் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்து பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தினை கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார்.

1. அரசாணை 20. நாள் 24.07.2023 மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வெளியிடப்பட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களாக இருப்பின், அவற்றை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்த ஆவன செய்யப்படும். 2. கல்லூரியில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதற்கட்டமாக அவர்கள் கல்வியினை அணுகல் தன்மையுடன் பெற மடிக்கணினிகள் மற்றும் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்க ஆவன செய்யப்படும். 3. அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண விலக்கு, கல்விக் கட்டண விலக்கு, தேர்வுக் கட்டண விலக்கு மற்றும் பதிலி எழுத்தர் தொகை (scribe allowance) ஆகியவற்றை முறையாக செயல்படுத்த உயர்கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்ப ஆவன செய்யப்படும். 
4. அரசுப் பதவிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிட ஆவன செய்யப்படும். இதனைத் தொடர்ந்து, 23.02.2024 மற்றும் 27.02.2024 அன்று பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினருடன் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரால் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மாண்புமிகு அமைச்சர் அவர்களால் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளோடு கூடுதலாக அரசின் நிதி உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை 2017 முதல் கண்டறிந்து அவை நிரப்பப்படுவது கண்காணிக்க வேண்டும் என சங்கத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. அக்கோரிக்கையினை ஏற்று அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு மூலம் அரசின் நிதி உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை 2017 முதல் கண்டறிந்து அவை நிரப்பப்படுவது கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
மேற்காணும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. எனவே, பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தினை கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டது. 
இயக்குநர் 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள : 
Indiprnews 
tndipr Indipr 
TN DIPR 
www.dipr.tn.gov.in

செய்தியைப் படிக்க மற்றும் பதிவிறக்க:

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க உறவுகளே! 

போராட்ட வீரச் சிங்கங்களே!

சாலைக் களத்தில் அடக்கு முறைகளைச் சந்தித்த கட்டிளங்காளைகளே! 

லத்தியில் அடிபட்டும் சாலையில் இழுபட்டும் மனமது தளராமல், மாண்பினைக் காத்தோரே! 

துற்சாதனர் கூட்டத்தையும் துட்சமென மதித்து துனிவுடன் களம் கண்ட வெற்றிப் பூவையரே!

உறிமைப் போராட்டம் வெற்றி காண்பதற்கு மானென துள்ளி வரும் மாணவர் கூட்டங்களே!

வியாபாரம் என்னும் வாழ்வாதாரத்தை முழுமையாய் துரந்து, போராட்டக் கடலில் வெற்றி எனும் முத்தெடுக்க மூச்சடக்கிய எம் தொழிலாளர் சமூகமே!

போராட்டத் தேரை பலர் சேர்ந்து வடம் பிடித்து பதினாறு நாள் போராடி வெற்றிப் பீடத்தின் அருகில் நிருத்தி இருக்கிறோம். இந்த அரிய சாதனைக்கு பல்லாற்றானும் பணி புரிந்த அத்துணை பேருக்கும் நம் சங்கத்தின் செயற்குழுவின் சார்பிலும் போராட்டக் குழுவின் சார்பிலும் நெஞ்சாந்த நன்றிகளை நாவார உரைக்கின்றோம்.

16 நாள் பட்டினி என்று சாதாரணமாய் சொல்ல முடியுமா? பசி வந்தால் பத்தும் பரந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த நால்வரின் பசியும் நம் சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் பற்றினை மெய்ப்பித்திருக்கிறதே!

இவர்களின் உயிர் வேதனையையும் வீரச் செயலையும் வெல்ல எம்மிடம் ஒரு சொல் கூட இல்லை!

ஈடில்லா உங்கள் தியாகத்தையும் போராட்ட குணத்தையும் நாங்கள் போற்றுகின்றோம். உங்கள் நால்வரின் பாதத்தை எம் கண் நீரால் கழுவுகின்றோம்.

உண்ணா விரத வீரர்களை தாயுள்ளத்துடன் கனிவாய் கவணித்துக் கொண்ட நம் சகோதரர் தொண்டுள்ளங்களுக்கும் எமது மனப் பூர்வமான நன்றிகள்.

காலில் முள் தைத்தால் கண்ணில் நீர் பெருகுவதும், கண்ணில் விழுந்த தூசியை எடுக்க கை ஓடுவதும் உடலியல் இயற்கை. ஆனால் இங்கு சென்னையில் தொடங்கிய நமது எழிச்சிப் போராட்டம் தமிழ் நாடு முழுவதும் எதிரொலித்ததை என்னென்று சொல்ல! பல்வேறு மாவட்டங்களில் கவண ஈர்ப்பு ஆர்பாட்டங்களும் சாலை மரியல்களும் கண்டன ஆர்பாட்டங்களும் நடத்தி நம்மின் ஒற்றுமையை உலகோருக்குச் சொல்லி நமது போராட்டத்திற்கு பலம் சேர்த்த அத்தனை 

உணர்வாளர்களுக்கும் எமது உளப் பூர்வமான நன்றிகள்!

நம் போராட்டத்தின் ஞாயங்களையும் நமது வாழ்வாதாரத் தேவைகளையும் மக்களிடமும் அரசாங்கத்திடமும் கொண்டு சேர்த்து நமது போராட்டத்தின் வெற்றிகளுக்கு வழிவகுத்த ஊடக நண்பர்களுக்கும் நம் சங்கத்தின் செயற்குழுவும் போராட்டக்குழுவும் நெஞ்சார நன்றி நவில்கின்றது.

12 ஆம் தேதி தொடங்கிய நமது போராட்டம் கிட்டத்தட்ட 7 கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு வெற்றிப் பீடத்தை அடைந்திருக்கிறது.

நாம் வைத்த 9 கோறிக்கைகளில் 5 கோறிக்கைகளை நிரைவேற்றுவதாக அரசு தனது செய்தி வெளியீட்டின் வழியாக உருதி அளித்திருக்கிறது. அதன் பேரில் நாம் தர்போது போராட்டத்தினை ஒத்தி வைத்திறுக்கிறோம். 

அரசு நிரைவேற்றுவதாக உருதியளித்துள்ள 5 கோறிக்கைகள் வருமாறு.

1. அரசாணை 20. நாள் 24.07.2023 மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வெளியிடப்பட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களாக இருப்பின், அவற்றை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்த ஆவன செய்யப்படும். 2. கல்லூரியில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதற்கட்டமாக அவர்கள் கல்வியினை அணுகல் தன்மையுடன் பெற மடிக்கணினிகள் மற்றும் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்க ஆவன செய்யப்படும். 

3. அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண விலக்கு, கல்விக் கட்டண விலக்கு, தேர்வுக் கட்டண விலக்கு மற்றும் பதிலி எழுத்தர் தொகை (scribe allowance) ஆகியவற்றை முறையாக செயல்படுத்த உயர்கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்ப ஆவன செய்யப்படும்.

4. அரசுப் பதவிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிட ஆவன செய்யப்படும். இதனைத் தொடர்ந்து, 23.02.2024 மற்றும் 27.02.2024 அன்று பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினருடன் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரால் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மாண்புமிகு அமைச்சர் அவர்களால் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளோடு கூடுதலாக அரசின் நிதி உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை 2017 முதல் கண்டறிந்து அவை நிரப்பப்படுவது கண்காணிக்க வேண்டும் என சங்கத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. அக்கோரிக்கையினை ஏற்று அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு மூலம் அரசின் நிதி உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை 2017 முதல் கண்டறிந்து அவை நிரப்பப்படுவது கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேற்காணும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நமது போராட்ட குணங்களுக்கு சற்றே ஓய்வளித்திருக்கிறோம். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தாலும் இந்த போராட்டத்தினை ஒரு சாராரின் போராட்டமாக காணாமல், ஒரு சமூக எழிச்சிப் போராட்டமாக இந்த போராட்டத்தினை நடத்த துணை நின்ற அத்துணை நல் உணர்வாளர்களுக்கும் மீண்டும் சங்க செயர் குழுவின் சார்பிலும் போராட்ட குழுவின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை உறித்தாக்குகிறோம். 

உறிமையை மீட்க எங்கேயும் எப்போதும் இந்த போர் குணம் தேவைப்ப்படும். எனவே உன் போராட்ட குணத்தை அப்படியே கைக்கொண்டிரு எமது எழிச்சி மிக்க சமூகமே! தேவைப்படின் மீண்டும் களத்தில் சந்திப்போம்!

சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.-அஷோக் ஐயப்பன்

 பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்திற்கும். தன் உயிரை பணயம் வைத்து பதினாறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்த போராளிகளுக்கும். ஒவ்வொரு நாளும் சாலையில் நின்று ரத்தம் சிந்திய வலியை தாங்கிய. ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் தோழர் தோழியருக்கும். என் மனப்பூர்வமான நன்றிகள். இந்தப் போராட்டம் பலரின் முகமூடிகளை கிழித்து விட்டது. ஒரு மாற்றுத்திறனாளியும் வருத்தப்படக் கூடாது என்று கூறியவரின் முகமூடியை கிழித்தது. நமக்கான ஆணையம் ஒருபோதும் நமக்காக இல்லை என்ற உண்மையை சொல்லி. மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் முகமூடியை கிழித்தது. சமூக நீதிப் பேசிய மனிதத்தைப் பற்றி பேசிய. ஒவ்வொரு கட்சிகளின் முகமூடிகளையும் கிழித்தது. ஒரே ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்காக போராடிய சங்கம். ஓடி ஒளிந்த போது அதன் முகமூடியையும் கிழித்தது. பார்வையற்றவர்களின் வளர்ச்சிக்காக தான் எங்கள் சங்கம் என்று வீரம் முழக்கமிட்ட தலைவர்கள் ஓரமாய் ஒதுங்கியபோது. அவர்களின் முகமூடியையும் கிழித்தது. போராட்டக் களத்தில் தனித்து விடப்பட்ட போதும் துணிந்து நின்றவர்களே. உங்களுக்கு என் நன்றிகள்.. அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்களே உயர்ந்தவர்களே. இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். என் சக தோழரே தோழியரே. நம் தன்மானம் சீண்டப்படும் போது. நம் உரிமைகள் மறுக்கப்படும் போது. அடக்குமுறைகள் நம்மை அடக்க நினைக்கும் போது. பணிந்து விடாதீர்கள் தலை குனிந்து விடாதீர்கள். நம் முதுகெலும்புகள் உடைக்கப்படும் பிறகு எப்பொழுதும் நம்மால் நிமிரவே முடியாது. இந்தப் போராட்டம் நமக்குள் ஏற்றி வைத்த தீயை அணைத்து விடாதீர்கள். குள்ளநரி கூட்டம் புறப்பட்டு வரும். தாயுள்ளம் கொண்ட அரசு என்று கோஷம் போட அழைக்கும். நமக்குள் எரியும் தீ அந்த கூட்டத்தை பொசுக்கட்டும். எப்பொழுதும் நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை உரக்கச் சொல்லுங்கள். போராட்டக் களத்தில் என்னால் வந்து நிற்க முடியவில்லை என்னை மன்னியுங்கள். போராட்டக் களத்தில் நின்ற ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். S. அசோக் பாலா

அன்றும் இன்றும்: – A. S. சபியுல்லா.

தமிழர்களே தமிழர்களே! நானோ கட்டுமரம்,

நான் முதல்வன்! நான் தான் பட்ட மரம்.

தமிழர்களே தமிழர்களே! நான் கடலில் எதிர்நீச்சல் போட்டு வருவேன்.

நான் முதல்வன்! பார்வையற்றோர் கண்ணீரில் தினம் நீச்சல் போட்டு வருவேன்!

தமிழர்களே தமிழர்களே! வாழ்க்கைப்படகு இயங்க பணி வாய்ப்பு என்னும் துடுப்பு தந்தேன்.

நான் முதல்வன்! பார்வையற்றோரின் வாழ்க்கைப் படகு தல்லாட காவல்துறை

என்னும் தடுப்பு வேலியை தந்தேன்!

தமிழர்களே தமிழர்களே! நான் விழியற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு

வழிகாட்டியாய் இருந்தேன்.

நான் முதல்வன்! நான் விடியல் அரசு என்று சொல்லிவிட்டு, விடியா அரசின்

தலைவனாக நின்றேன்!

தமிழர்களே தமிழர்களே! நான் மார்ச் ஒன்றாம் நாளன்று

மாற்றுத்திறனாளிகளுக்கென தினம் ஒன்றை அரிவித்து மகுடம் சூட்டினேன்.

நான் முதல்வன்! நான் மார்ச் ஒன்று வரை உண்ணாவிரதம் இருக்க வைத்து மயக்கமூட்டினேன்!

தமிழர்களே தமிழர்களே! நான் அவர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும்

எப்பொழுதும் அங்கீகாரம் வழங்கினேன்.

நான் முதல்வன்! நானோ அவர்களின் உரிமைக்கான சாலை மறியல் போராட்டத்தை

சூட்சகமாக இப்பொழுது வரை அடக்கினேன்!

தமிழர்களே தமிழர்களே! நான் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து படியை அறிவித்தேன்.

நான் முதல்வன்! நானோ உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகளை போலீசை

விட்டு அடிக்க அறிவித்தேன்!

தமிழர்களே தமிழர்களே, நிறைய செய்யும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் துறையை

என்னிடமே வைத்துக் கொண்டேன்.

நான் முதல்வன், அப்படியே பெயர் மாற்றம் செய்து அனைத்து துறைகளையும்

எடுத்துக் கொண்டேன், பிறகு என்ன மாற்றுத்திறனாளிகளை வைத்து செய்து

கொண்டிருக்கிறேன். வேண்டுமென்றால் பார்வையற்றோரை கேளுங்கள்!

தமிழர்களே தமிழர்களே! நான் அரசு ஊழியர்களையும் மாற்றுத்திறனாளிகளையும்

கண்ணின் இமை போல காத்து வந்தேன்.

நான் முதல்வன்! நான் அரசு ஊழியர்களையும் மாற்றுத்திறனாளிகளையும்

கடுஞ்சுமை போல பார்த்து வந்தேன்!

தமிழர்களே தமிழர்களே! நான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து ஐந்து முறை

முதலமைச்சராக வந்து தமிழகத்தை தூக்கி நிறுத்தினேன்.

நான் முதல்வன்! நான் தமிழகத்தை சுமக்க முடியாமல் சுமைகள் அனைத்தையும்

பார்வையற்ற மாற்றுத்திறனாளர்களின் வாழ்வாதாரத்தின் மீது இறக்கி வைத்தேன்!

ஏனப்பா ஸ்டாலின்! நான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருந்தேனே, நீ ஐந்து

ஆண்டுகள் ஆவது இருக்கணும் இல்லையா?

அது ஒன்னும் இல்ல தலைவரே, கூட இருக்குறவங்க எல்லாம் கை கொடுப்பாங்க

தூக்கிடலாம் நெனச்சேன்.

, இவங்க எல்லாம் கால வாரி விட தான் தயாரா இருக்காங்க அதனால தான் சுமக்க

முடியாம தவிக்கிறேன்!

தம்பி ஸ்டாலின் என் பேரு நிலைச்சி இருக்க நான் உழைச்சிட்டேன்!

என் பேயரிலேயே திட்டத்தை கொண்டு வராமல், உன் பேரு எப்போதும் நிரந்தரமா

இருக்க நீ பாத்துக்கோ!

போய் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவங்களுடைய குறையை தீர்த்து வை!

சண்முகம் இருந்தால் கூடவே அழைச்சிட்டு போ

தலைவரே! சண்முகம் எப்பவோ உங்ககிட்ட வந்துட்டாரு!

, , அதான பார்த்தேன் அவன் இருந்திருந்தா நீ போய் பார்த்து இருப்பியே!

, வயது மூப்பு காரணமாக எனக்கு காது கேட்காத போது அவன் தான் அவங்களுடைய

கோரிக்கைய கத்தி கத்தி சொன்னான்!

, நானும் அந்த கோரிக்கைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா நிறைவேற்றினேன். நீயும்

போய் பாரு ஸ்டாலின்.

, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, என் மகன் ஸ்டாலின் என்

கொள்கைகளை நிலை நிறுத்துபவன் என்பதை நிரூபிக்கும் நேரம் இதுவே!

ஆகவே இதுவரை அயர்ந்திருந்தது போதும், இனியாவது அவர்களின் துயர் துடைக்க புறப்படு!

தலைவரே, அவுங்க எல்லோரும் ஒண்ணா வந்து சாலை மறியலில் உட்காருவாங்க.

கோஷத்தை போடுவாங்க. பிறகு எல்லாம் தானா சரியாகிவிடும்!

 அதற்காக நம்ம ஏன் தலைவரே, எல்லா கோரிக்கையும் நிறைவேத்தனும்!

நீ அடுத்த தேர்தலில் ஜெயிக்கணுமா? வேண்டாமா?

தலைவரே, நம்ம கொண்டு வந்த திட்டத்துக்காக நாங்க அமோகமா ஜெயிப்போம்.

கண்ணு தெரியாதவன் ஓட்டு எதுக்கு தலைவரே?

ஒரு நல்ல அரசியல்வாதிக்க அழகே அடிமட்ட தொண்டனுடைய ஓட்டையும்

முக்கியமானதா பாக்கணும்.

, யாரையும் ஏளனமா பார்க்காத

, , இது நல்ல அரசியலுக்கு அழகு இல்லை!

, , நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. என்கூட தானே இருந்த.

, , இதெல்லாம் சரியா செய்வேனு நினைச்சி தான் விட்டு வந்தேன். ஆனா நீ

சொதப்ப ஆரம்பிச்சுட்ட!

, நான் செஞ்ச ஆட்சி மாதிரி செய்றேன்னு சொல்ற. நல்லா மக்களை

கவனிச்சிக்கிறேன்னு சொல்ற. ஆனால் மாற்றுத்திறனாளிகளை மட்டும் வஞ்சிக்க

கூடிய அரசாக இதுவரைக்கும் செயல்பட்டு இருக்கிர. இதெல்லாம் சரி வராது.

உடனே போ! அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேத்து!

, ,

, , இல்லன்னா என்னுடைய ஆத்மா கூட அவர்களுக்காக இந்த தமிழக அரசிடம்

போராடிக் கொண்டே இருக்கும்!

படைப்பாக்கம்.

A. S. சபியுல்லா.

தமிழ் ஆசிரியர்.

குடியாத்தம்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *