பார்வையற்றோர்களே! – மோசஸ்ராஜ்
நான்தான் உன் வாழ்வோடு ஒன்றிய போராட்ட குணம் பேசுகிறேன்.
என் குரல் உனக்கு கேட்கின்றதா?
தன்னம்பிக்கை கொண்டு,
இரவு முழுதும் புல்முனையில் நின்று தவமியற்றும் பனித்துளிக்கு.
விடிந்தவுடன் மோட்சம் கிடைத்து விடுகிறது !
வாழ்நாள் முழுவதும் என்னையே சுமந்து செல்லும் உனக்கு !
வாழ்க்கை இல்லை என்று கதறும் உன் குரல் எனக்கு கேட்கின்றது.
என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை.
அதை நீ உணர்ந்தது உண்டா?
வயிற்று பசியோடு
மட்டுமல்ல!
வேலை வேண்டும் என்ற பசியோடும்
எப்போதும் தாகமாகவே இரு.
அப்போது தான்
உன் தேடல் வெறி கொள்ளும்
உன்னை தேடி வெற்றி வரும் .
களம் வா, வா என்று அழைக்கிறது!
காளையர்களே போராட்டம் களம் நோக்கி அணி திரண்டு வாருங்கள்.
ஒன்பது அம்ச கோரிக்கை என்னும் கொடி பிடித்து!
கொடியவர்களின் கோட்டை நோக்கி அணிதிரலுங்கள்.
சிந்திப்பவை சில நேரம் தான் நீடிக்கும்.
நம்பிக்கை வாழ்நாள் வரை நீடிக்கும்.
தம்பி நான் புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறேன்!
அண்ணன் நீங்கள் வீட்டில் உறங்குவது நியாயமாகுமா?
யாரோ போராடிப் பெற்ற உரிமையில்!
நாம் உல்லாசம் அனுபவிக்கிறோம். சலுகையை நீ கேட்கிறாய் என்று!
சமூக விரோதிகள் சர்ச்சையை வீசுகிறார்கள்.
சங்கத்தின் நலன் கருதி என்று சிலர் வாய்க்குள்ளே மௌனம் பேசுகிறார்கள்.
சங்கம் கடந்து!
பார்வையற்றோர் ஒற்றுமை சங்கமிக்கும் நேரம் இது.
பகைமையை வைத்து !
பல் இளிக்கும் நேரம் இது அல்ல.
உடன்பிறப்புகளே ஒன்றுபடுங்கள்!
உரிமைகளை மீட்டெடுங்கள்.
தடைகளை உடைப்போம்!
சமூகம் ஒன்று பட்டு புது சரித்திரம் படைப்போம்.
*மோசஸ் ராஜ்*
பார்வையற்றோர் போராட்ட அறிவிப்பு தூத்துக்குடி
நாள் 26 02 2024. இடம் தூத்துக்குடி மாவட்டம் நேரம் காலை பத்து மணி. அனைவருக்கும் வணக்கம் சென்னையில் நமது பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களை ஆதரிக்கும் வண்ணமாக கடந்த சில நாட்களில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வருகிற திங்கள்கிழமை அன்று காலை பத்து மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பார்வையற்ற நண்பர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு 6383688605 8220671995 8870908582
அன்போடு கேட்டுக்கொள்கிறேன். – நவீன் மயிலாடுதுறை
எமது பார்வையற்ற சமூக உறவுகள் இந்த பதிவினை முழுமையாக படிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நமது பார்வையற்ற உறவுகளில் சில பேர் சமூக வலைதளங்களில் தேவையற்ற வார்த்தையினை பயன்படுத்தி உங்களது கண்டனத்தினை தெரிவிக்கிறீர்கள்.
இவ்வாறு பேசுவது நமக்கு எதிராக முடியும் என்பதனை கருத்தில் கொண்டு கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் நமது தியாகிகளை நினைத்துப் பாருங்கள் நமது பார்வையற்ற சமூகத்தை சார்ந்த பெண்கள் படும் கஷ்டத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நமது உறவுகள் தினந்தோறும் போராட்ட களத்தில் அனுபவிக்கும் சித்திரவதையை நினைத்துப் பாருங்கள், இவ்வளவு கொடுமைகளையும் நமது போராட்ட தியாகிகள் ஏன் தாங்கிக் கொள்கிறார்கள், நமது பார்வையற்ற சமூகம் இந்த சமூகத்தில் மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற காரணத்தினால் தான்.
நாம் பண்ணும் போராட்டம் அரசுக்கு தெரியாமல் இல்லை அது மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது அதனால் நாம் செய்யும் சிறு தவறும் நமக்கு பாதகமாக முடிய வாய்ப்பு இருக்கிற காரணத்தினால் நமது அன்பு உறவுகள் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இங்கனம் நவீன் மயிலாடுதுறை.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
